சென்னை.
காலமாற்றத்திற்கு ஏற்ப தன்னை அப்டேட் செய்துகொண்டு எப்போதும் முன்னணி இயக்குனர்கள் வரிசையிலேயே தன்னை தக்கவைத்து கொண்டிருப்பவர் இயக்குனர் சுந்தர்.சி. கவலைகளை மறந்து குடும்பத்துடன் சிரித்து மகிழ்ந்தபடி கலகலப்பான படம் பார்க்க வேண்டும் என்றால் அந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பதும் இயக்குனர் சுந்தர்.சியின் படங்கள்தான். முழுநீள காமெடி படங்கள் என்றாலும் சரி ஹாரர் படங்கள் என்றாலும் சரி அனைத்துமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தியேட்டருக்கு அழைத்து வரக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைந்திருக்கும்..
அந்த வகையில் அரண்மனை-3 படத்திற்கு பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் காபி வித் காதல். குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் என மூன்று கதாநாயகர்கள் நடிக்க, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோர் நடிக்கின்றனர் . .
பல வருடங்களுக்கு முன்பு சுந்தர்.சி இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம், ஊட்டியை கதைக்களமாக கொண்டு எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றியை பெற்றது .அந்த வகையில் தற்போது இந்த படமும் சென்னையில் துவங்கி ஊட்டியில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 75 நாட்கள் நடைபெற்றுள்ளது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். மொத்தம் 8 பாடல்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது .மேலும் E.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்கிறார்.
ஒரு குடும்பத்தில் உள்ள மூன்று சகோதரர்கள் அவர்களுக்குள் ஒத்துப்போகாத வெவ்வேறு பாதைகளில் பயணிக்கிறார்கள் . இசையமைப்பாளராக ஒருவன் , ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவன் , சமையல் வேலையில் ஆர்வம் உடைய ஒருவன் . அவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை மையப்படுத்தி இந்த படத்தில் சுந்தர்.சி. தனது பாணியில் கலகலப்புடன் கூறி இருக்கிறார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் வரும் ஜூலை மாதம் படத்தை திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
நடிகர்கள்
ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, ரைசா வில்சன், அம்ரிதா ஐயர்,ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத் சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி
தொழில்நுட்பக்குழு:
எழுத்து ,இயக்கம் – சுந்தர் சி
தயாரிப்பு – அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட்
மற்றும் பென்ஸ் மீடியா சார்பில் குஷ்பு சுந்தர் C , ACS அருண் குமார்
இசை – யுவன் ஷங்கர் ராஜா
ஒளிப்பதிவு- E.கிருஷ்ணசாமி
படத்தொகுப்பு -ஃபென்னி ஆலிவர்
கலை -குருராஜ். B
நடனம் -ராஜு சுந்தரம், ராபர்ட், சாண்டி,தீனா
சண்டை பயிற்சி -தளபதி தினேஷ்
நிர்வாக தயாரிப்பு- பாலா கோபி
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்
Sundar C’s ‘Coffee With Kadhal’, to release in July!
They say friendship starts with a hello and love over a cup of coffee.
‘Coffee With Kadhal’ is brewing to spread the magic of rejuvenating hearts and connecting souls.
Director Sundar C is one among the directors who updates himself with the changing times. If you want to forget your worries and have a laugh along with your family; his films top the list.
Be it comedy that would make you laugh your gut out, or spine chilling horror films… His films have an audience ranging from young kids to adults.
In that sense, after ‘Aranmanai-3’, Sundar C is currently helming ‘Coffee with Kadhal’ produced by Khushbu’s Avni Cinemax Pvt Ltd and ACS Arun Kumar of Benzz Media. The film stars Jiiva, Jai, Srikanth, Amritha Aiyer, Malvika Sharma, Raiza Wilson and Aishwarya Dutta, Dhivyadharshini (DD), Yogi Babu, Redin Kingsley, Pratap Pothan, Vishu Viswanath, Samyukta Shanmugham, Aruna Balraj and Baby Vrithi.
Many years ago, Sundar C’s ‘Ullathai Allitha’ was a huge success. The film’s plot was set and shot in Ooty. Similarly, this film too was currently shot in Chennai and mostly in Ooty for 75 days.Yuvan Shankar Raja is composing the music for the film with a total of 8 songs. The plot of the film revolves around three brothers in a family who are on paths that do not seem to go well with each other. One is a musician, another works in an IT company, and the third is a Chef. Sundar C focuses on the problems they face and plans to show it in an entertaining way.
The Team is planning to release the film in theaters in July as post-production work on the film is nearing completion. An official announcement about the release date will be revealed soon.
CAST:
Jiiva, Jai, Srikanth, Amrita Aiyer, Malvika Sharma, Raiza Wilson, Aishwarya Dutta, Dhivyadharshini (DD), Yogi Babu, Redin Kingsley, Pratap Pothan, Vichu Vishwanath, Samyuktha Shanmugham, Aruna Balraj, Baby Vrithi
CREW:
Story and Direction – Sundar C
Produced by Khushbu Sundar (Avni Cinemax Pvt Ltd) and ACS Arun Kumar (Benzz Media)
Music – Yuvan Shankar Raja
Cinematography- E. Krishnasamy
Editing – Fenny Oliver
Art – Gururaj. B
Dance – Raju Sundaram, Robert, Sandy, Deena
Stunt Direction – ‘Thalapathi’ Dinesh
Production Executive- Bala Gopi
Public Relations – Riaz K Ahmed