தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் “ரெஜினா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட வெங்கட் பிரபு.!

121

சென்னை.

தென்னிந்திய திரையுலகின்  திறமை மிக்க பிரபல நடிகை இருப்பவர் சுனைனா.  ‘நீர்ப்பறவை’,  ‘சில்லுக்கருப்பட்டி’ படங்களில்  தன் நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தவர், தற்போது பன்மொழிகளில் உருவாகும் #ரெஜினா என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.  ( Yellow Bear Production LLP ) எல்லோ பியர் புரொடக்‌ஷன் சதீஷ் நாயர் இப்படத்தினை தயாரிக்கிறார். இப்படம் நான்கு மொழிகளில் தயாராகிரது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் “ரெஜினா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று பிரபல டைரக்டர் வெங்கட் பிரபு வெளியிட்டார். மலையாள போஸ்டரை பிரபல மலையாள டைரக்டர் ஆஷிக் அபு ( AASHIQ ABU ) வெளியிட்டார்.
இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார், மலையாள பிரபலம் டோமின் டி சில்வா. இவர், மலையாளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட “பைப்பின் சுவத்திலே பிராணயம்” மற்றும் “ஸ்டார்” படங்களை இயக்குகியவர். இப்படம் பெண்களை மையமாகக் கொண்ட ‘ஸ்டைலிஷ் திரில்லராக’ இருக்கும் என்று இயக்குநர்  டோமின் டி சில்வா கூறியுள்ளார். மேலும் நீரோட்டத்திற்கு எதிராக ஒரு மீன் நீச்சலடிப்பதை போல, இப்படம் ஒரு சாதாரண இல்லத்தரசி ஆக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றியதாகவும், அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக இருக்கும், ”என்றார்.

ரெஜினா படத்தின் பாடல்களை இசையமைத்து படத்தை தயாரிக்கிறார் சதிஷ் நாயர்.இந்த பாடல் 4 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.  சில பாடல்கள் சிங்கப்பூரில் பதிவாக்கப் பட்டது. கிராமி விருது வென்ற, டபுள் பேஸ்-இல் இசையமைக்கும் வல்லமை படைத்தவர்களில் ஒருவரான கிறிஸ்டி  வாசித்து இருக்கிறார். இவருடன் ஜோண்ட் என்பவரும் வாசித்திருக்கிறார். இவர் ஜாஸ் பாணியில் வல்லமை வாய்ந்தவர். பாடல்களுக்கான வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R எழுதியுள்ளனர். பவி K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் செய்கிறார். PRO ஜான்சன்.

படத்தின் படல்கள் வெளீயீடு மற்றும் வெளியீட்டுன் தேதி பின்னர் அறிவிக்கப் படும்.

Sunaina in a Stylish Thriller Film ‘Regina’.

Director Venkat Prabhu released the Firstlook of “Regina” in Tamil,Telugu,Hindi.
Famous Malayalam Director Aashiq Abu released the Malayalam poster.

Sunaina is a Talented Actress in the South Indian Film Industry.She Attracted Everyone with her acting skills in films like NeerParavai and Sillu Karupatti.Now she is playing the lead role in the Multi Language film ‘Regina’.

Yellow Bear Production LLP, Sathish Nair is producing the film.The film is being made in 4 languages.The First look poster of ‘Regina’ is released in Tamil,Telugu,Hindi by Director Venkat Prabhu.The Malayalam Poster was released by Director Aashiq Abu.

Malayalam Fame Director Domin D Silva is getting introduced in Tamil through this film.
He directed films like ‘Pyppin Chuvattile Pranayam’ and ‘Star’.The Film ‘Regina’ will be a Stylish Thriller and will be a  Women Centric film.The Film is about a Normal Housewife who achieves extraordinary things.

The Film is both being produced and Music Composed by Sathish Nair.The songs are being dubbed in 4 languages.Few songs are recorded in singapore.Grammy Award Winner Christy who is well talented in playing Double Bass has worked in the song composing.Along with him Joe has composed the music.He is famous for Jazz Music.

The Lyrics are penned by Yugabarathi,Vivek Velmurugan,Vijayan Vincent and Ijaas.R
Pavi K.Pavan is working as the cinematographer and Kamarutheen is roped in as the Art Director.Dobi John as Editor and Costume Designer Aegan.PRO Johnson.

The Release date and song announcement will be shared later.