சென்னை.
தமிழின் முன்னணி ஓடிடி தளங்களை கடந்து, தமிழ் மொழிக்கென்றே பிரத்யேகமாக சிறப்பான படைப்புகளை வழங்கி, வெகு வேகமாக வளர்ந்து வருகிறது ஆஹா ஓடிடி தளம். ஆஹா தளத்தின் அடுத்த படைப்பாக வெளியாகிறது ஆன்யா’ஸ் டுடோரியல் இணைய தொடர். இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி இயக்கத்தில் ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா சதீஷ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் ஒரு புதுமையான ஹாரர் தொடராக உருவாகியுள்ளது. ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இத்தொடரை தயாரித்துள்ளது. ஜூலை 1 அன்று வெளியாகவுள்ள இந்த இணைய தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
ஆஹா தமிழ் சார்பில் அஜித் தாகூர் கூறியதாவது..,
ஆஹா எல்லா வெள்ளிக்கிழமைகளிலும் புதுமையான கதைகள் கொண்ட படைப்புகளை வெளியிடுகிறது. 190 நாடுகளில் ஆஹா ஓடிடி வெற்றிகரமாக ஸ்ட்ரீம் ஆகிறது. அதற்கு உங்களது ஆதரவு தான் காரணம். முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் ஆஹா தமிழ் தளத்தை நிறுவினோம். இப்போது 2 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களை கடந்து வெற்றிகரமாக செயல்பட்டுவருகிறது. ஒவ்வொரு தனிப்பட்ட மொழிகளிலும், அதற்கு ஏற்றவாறான தனித்தன்மை கொண்ட படைப்புகளை கொடுத்து வருகிறோம். அதற்கு மக்களும் வரவேற்பை கொடுத்துள்ளனர். இந்த தொடர் எங்களுக்கு மிகவும் சிறப்பான வாய்ந்த ஒன்று. இந்த தொடரின் அறிவிப்புக்கு வந்துள்ள SJ சூர்யா, சுந்தர் சி, விஜய் ஆண்டனி ஆகியோருக்கு நன்றி. அல்லு அரவிந்த் அவர்களுக்கு நன்றி. ஆன்யா டுடோரியல் தொடர் இவ்வளவு பெரியதாக உருவாக காரணம் சோபு தான். இந்த கதையை கேட்டவுடன் இதில் சவாலான பல கதாபாத்திரங்கள் இருப்பது புரிந்தது. அந்த பாத்திரங்களுக்கு ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா இந்த கதையில் பொருத்தமாக இருந்தார்கள். ஆஹாவில் உள்ளடக்க பிரிவில் முதலில் இணைந்த நபர் இயக்குனர் பல்லவி தான். பின்னர் அவர் இயக்குநராக தன் பயணத்தை தொடர வேண்டும் என விருப்பப்பட்டு இயக்குநராக மாறினார். இந்த தொடரை சிறப்பாக இயக்கியுள்ளார். இது ஒரு உணர்வுபூர்வமான கதையாக இருக்கும். நாங்கள் எப்போதும் புதுமையான கதைகளை உருவாக்க விருப்பபடுவோம். அந்த வகையில் ஆன்யா’ஸ் டுடோரியல் எங்களது முக்கியமான படைப்பாக இருக்கும். இந்த தொடரை எடுத்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.
தயாரிப்பாளர் சோபு ஆர்லகண்டா கூறியதாவது..,
இது தான் எங்களது முதல் தமிழ் படைப்பு, அதில் ஆஹா உடன் இணைந்தது மகிழ்ச்சி. பெரிய படமோ, சின்ன படமோ எங்களுக்கு கதை தான் முக்கியம். அந்த வகையில் ஆன்யா’ஸ் டுடோரியல் சிறப்பாக வந்துள்ளது. இந்த தொடரின் கதையை கேட்டவுடன், கதையில் இருந்த டிராமா எங்களை கவர்ந்தது. இயக்குனர் பல்லவி கங்கி ரெட்டி உடைய இயக்கத்தில் வரும் முதல் படைப்பு இது. ரெஜினா கஸண்ட்ரா, நிவேதிதா இந்த தொடருக்குள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி. அவர்கள் இருவரும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். நாங்கள் ஆஹா உடன் பயணிப்பதில் மகிழ்ச்சி.
நடிகை நிவேதிதா சதீஷ் கூறியதாவது..,
இந்த தொடர் எனக்கு மிகவும் நெருக்கமான தொடர். இது போன்ற பெரிய படைப்பில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி. இந்த தொடரில் எனது திறமையை காட்டுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஒரு பெண்கள் குழுவில் பயணித்தது மகிழ்ச்சி. படத்தின் ஒட்டுமொத்த குழுவும் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளனர். திரைத்துறையில் அறிமுகமான போது பல இடங்களில் நான் நிராகரிக்கபட்டுள்ளேன், இப்போது அதையெல்லாம் கடந்து இப்படி ஒரு முக்கியமான தொடரில் நடித்திருப்பது மகிழ்ச்சி, உங்கள் அனைவருக்கும் இந்த தொடர் பிடிக்கும் என நினைக்கிறேன்.
எழுத்தாளர் சௌமியா கூறியாதாவது..,
இந்த தொடர் இப்போது இருக்கும் இந்த பெரிய வரவேற்பு, நாங்கள் இந்த கதையை உருவாக்கும் போது இல்லை. முதலில் எந்த நோக்கமும் இல்லாமல் தான் கதையை உருவாக்க ஆரம்பித்தோம், பின்னர் தீவிரமான கதையாக இது மாற ஆரம்பித்தது. பின்னர் தயாரிப்பாளரை சந்தித்து கதையை கூறியபோது, அவருக்கு பிடித்திருந்தது. பின்னர் நடிகர்கள் உள்ளே வந்தார்கள். எல்லாம் வேகமாக நடப்பதாய் இருந்தது. தொடரும் சிறப்பாக வந்துள்ளது. ஒரு நல்ல படைப்பாக தொடர் உருவாகியுள்ளது உங்கள் அனைவருக்கும் இந்த தொடர் பிடிக்கும் என்று நம்புகிறேன் நன்றி.
இயக்குநர் பல்லவி கங்கி ரெட்டி கூறியதாவது..,
டிரெய்லரை பார்த்து ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை இருக்கும். நான் ஆஹாவில் பணிபுரிந்துள்ளேன். ஆஹா சிறந்த கதைகளை எப்போதும் எடுக்க விரும்புவார்கள். ஆஹா தமிழில் சிறந்த பணிகளை செய்துவருகிறார்கள், தெலுங்கை விட பெரிய வெற்றியை ஆஹா தமிழ் பெரும் என நான் நம்புகிறேன். இந்த தொடர் உருவாக காரணமாக இருந்த தயாரிப்பு நிறுவனம் ஆர்கா மீடியா ஒர்க்ஸ்க்கு நன்றி. இந்த தொடரை இரு மொழிகளில் உருவாக்கினோம். அதற்கு நிறைய உழைப்பு தேவைப்பட்டது. படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களும், நடிகர்களும் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் இந்த இடத்தில் நன்றியை கூறிகொள்கிறேன். அல்லு அரவிந்த் அவர்களுக்கு நன்றி, என் வாழ்கையில் முக்கியமான நபர் அவர். தொடர் சிறப்பாக வந்துள்ளது, உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும் என நான் நம்புகிறேன்.
நடிகை ரெஜினா கஸண்ட்ரா கூறியதாவது..,
ஆர்கா மீடியா ஒர்க்ஸ் ஓடிடிக்கு வந்தது பெரிய விஷயம். இந்த படைப்பில் நான் இருப்பது மகிழ்ச்சி. அஜித் மற்றும் அல்லு அரவிந்த் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்யா’ஸ் டுடோரியல் போன்ற சைக்காலஜிகள், திரில்லர் கதைகள் வருவது மகிழ்ச்சி, நான் நடித்த மது கதாபாத்திரத்தை கண்டிப்பாக தவற விடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்தேன். பல்லவி போன்ற திறமையான ஆட்கள் சினிமாவிற்கு வருவது மகிழ்ச்சி. நான் அறிமுகமான போது திரைத்துறையில் பெண்கள் மிக குறைவாக இருந்தார்கள் இன்று இந்த மேடையில் ஆண்களுக்கு இணையாக பெண்கள் இருப்பது மகிழ்ச்சி. பல பெண்கள் இணைந்து இந்த தொடர் தயாரிப்பில் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி தான் இந்த தொடரின் முக்கியமான தூண், அவரது பணிகள் கதாபாத்திரத்தின் குணங்களை பிரதிபலிக்கும் படி இருக்கும். இந்த தொடர் உங்கள் அனைவரையும் கவரும் நன்றி.
நடிகர் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கூறியதாவது..,
பெரிய ஓடிடி நிறுவனங்களுடன் போட்டியிடும் ஆஹாவிற்கு வாழ்த்துகள். இந்த தொடரை இயக்கிய பல்லவி கங்கி ரெட்டிக்கு, வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன். படத்தை இயக்குவதே பெரிய சவாலான விஷயம், தொடரை இயக்குவது பெரிய விஷயம். ஒளிப்பதிவாளர் விஜய் சக்ரவர்த்தி அவர் சிறப்பான விஷுவல்களை கொடுக்க கூடியவர். சிறு வயதில் பேயை பார்க்க ஆசைப்பட்டு பல விசயங்கள் செய்துள்ளேன், இந்த தொடரில் பேயை சுவாரஸ்யமாக காட்டியிருப்பார்கள் என நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நடிகர் SJ சூர்யா கூறியதாவது..,
அல்லு அரவிந்த் உடைய வேகம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய குழுவும், திறமைமிக்க ஆட்கள் நிறைந்த குழுவாக இருக்கிறார்கள். முருகதாஸ் சார் டீமில் உள்ள எனர்ஜிடிக்கான நபர் பல்லவி. அவர் இயக்கிய தொடரின் விழாவிற்கு நான் வந்தது எனக்கு பெருமையான விஷயம். ரெஜினா எப்போதும் தன்னுடைய அழகையும், திறமையும் தொடர்ந்து கச்சிதமாக தக்கவைத்து கொண்டுள்ளார். நிவேதிதா, ரெஜினா கஸண்ட்ரா இருவரும் இந்த தொடருக்கு பொருத்தமான தேர்வு, இருவரது முக அமைப்பும் சகோதரிகள் போல் அப்படியே இருக்கிறது. எழுத்தாளரை தமிழுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. விஜய் ஆண்டனி பேயை பார்க்க ஆசை என்றார் ஒரு படம் எடுத்து தோல்வியடைந்தால் எல்லா பேயையும் பார்த்து விடலாம் ஒரு தோல்வி எல்லாவற்றையும் கற்றுத்தரும். பாகுபலி போன்ற படைப்பை எடுத்த ஒரு நிறுவனம், தமிழில் ஒரு சீரிஸ் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. பெரும் திறமை வாய்ந்த நபர்கள் இணைந்து இந்த தொடரை உருவாக்கி இருப்பது மகிழ்ச்சி. இந்த தொடர் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.
நடிகர், இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது..,
ஆஹா தமிழுக்கு எனது வாழ்த்துகள், அவர்கள் மூலமாக புது திறமையாளர்களும், கதைகளும் உருவாவது மகிழ்ச்சி. அல்லு அரவிந்த் ஓடிடியை இவ்வளவு துரிதமாக ஆரம்பித்து, அதில் வெற்றிகண்டுள்ளது மகிழ்ச்சி. நானும் விரைவில் ஆஹா தமிழுடன் பணிபுரிய விருப்படுகிறேன்.ஒரு ஹாரர் தொடரை எழுதுவது சுலபமான காரியம் அல்ல, ஏனென்றால் ஒவ்வொரு எபிசோடுக்கும் நிறைய உணர்வுபூர்மான காட்சிகளை வைக்க வேண்டும். டிரெய்லரை பார்க்கும் போது, ஈர்க்கும் வகையில் உள்ளது. ஒளிப்பதிவாளர் உடைய பணி சிறப்பாக உள்ளது, ரெஜினா கஸண்ட்ரா போன்ற சிறந்த நடிகர்கள் இந்த தொடரில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. நடிகை நிவேதிதா மிகச்சிறந்த தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த தொடரில் அவரது நடிப்பு சிறப்பாக உள்ளது. ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் எனது வாழ்த்துகள்.