சென்னை.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் ஜானியாக தோன்றி அனைவரையும் கவர்ந்த நடிகர் ஹரிகிஷ்ணன் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக டூலெட், மண்டேலா திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார்.
கோல்டன் சுரேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்குகிறார். A.குமரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சிவசங்கர் வசனம் எழுதுகிறார். ஸ்டில் கேமரா மேனாக M.குமரேசன் பணிபுரிய, புரொடக்ஷன் மேனேஜராக T.ராஜன், மக்கள் தொடர்பாளராக A. ஜான் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இந்தப்படத்தின் துவக்க விழா சென்னையில் ஜூலை-6 (இன்று) நடைபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித் இந்த தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு இப்பட பணிகளை துவங்கி வைத்தார். நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்கையில் நடக்கும் எதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழவிருக்கிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது.
தயாரிப்பாளர்: கோல்டன் சுரேஷ், விஜயலஷ்மி
நடிகர்கள்: ஹரிகிஷ்ணன், ஷீலா ராஜ்குமார்
இயக்குநர்: ஜஸ்டின் பிரபு
ஒளிப்பதிவு: A.குமரன்
படத்தொகுப்பு: வெங்கட் ரமணன்
வசனம்: சிவசங்கர்
ஸ்டில்ஸ் : M.குமரேசன்
புரொடக்ஷன் மேனேஜர்: T.ராஜன்
மக்கள் தொடர்பு: A. ஜான்
தயாரிப்பு நிறுவனம்: மஞ்சள் சினிமாஸ்
‘Madras’ fame Hari-‘Tolet’ fame Sheela starrer new movie launched by filmmaker Pa. Ranjith’
Producers Golden Suresh and Vijayalakshmi of Manjal Cinemas are producing a new movie featuring Hari Krishnan in the lead role. Hari Krishnan shot to fame for his critically acclaimed performance in Pa. Ranjith’s movie ‘Madras’. He is playing a unique role in this new movie. Actress Sheela Rajkumar, who has won appreciation for her stellar performances in the Tamil movies like Tolet, Mandela is playing the female lead role.
Produced by Golden Suresh, the movie is directed by Justin Prabhu. A. Kumaran is handling the cinematography, and Ramanan is taking care of editing. Siva Shankar (Dialogues), M. Kumaresan (Stills), T. Rajan (Production Manager), & John (PRO) are the other technicians in this project.
The launch of this movie happened today (July 6, 2022) in Chennai. Tamil film industry’s most reputed filmmaker Pa. Ranjith took part in the event, and launched this project.
The movie owns a realistic story revolving around the daily life routine of middle-class families. While the shooting is scheduled to kick-start soon, the entire movie will be filmed in and around the locales of Krishnagiri.
Production: Golden Suresh, Vijayalakshmi
Actors: Hari Krishnan, Sheela Rajkumar
Director: Justin Prabhu
Cinematography: A. Kumaran
Editing: Venkat Raman
Dialogues: Siva Shankar
Stills: M. Kumaresan
Production Manager: T. Rajan
Public Relations: A.John
Banner: Manjal Cinemas