இயக்குனர் சிகரம் அமரர் கே பாலச்சந்தர் அவர்களின் 92 வது பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடிய கே.பாலச்சந்தர் ரசிகர் சங்கம்!
சென்னை:
இயக்குனர் சிகரம் மறைந்த கே பாலச்சந்தர் அவர்களின் பிறந்தநாள் விழாவை வருடா வருடம் அவரது ரசிகர் சங்கம் சார்பாக மிகவும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இந்த வருடமும் அதே போல் அவரது சங்கத்தின் சார்பாக தலைவர் ராஜேஷ் அவர்களும் பொது செயலாளர் கவிதாலயா பாபு, இணைச் செயலாளர் பி. பழனி ஆகிய இருவரது மேற்பார்வையில் உலக நாயகன் கமலஹாசனின் அலுவலகமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் வளாகத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அமரர் கே பாலச்சந்தர் அவர்களின் திருஉருவ சிலைக்கு அவரது புதல்வி திருமதி புஷ்பா கந்தசாமியும் மருமகன் கந்தசாமி இருவரும் தலைமை தாங்கி கே பாலச்சந்தரின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடினார்கள்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக சித்தா ஆசிரியர் வேல்பாண்டியன், இயக்குனர் வசந்த், செலக்ட் எஸ் குமார், ஒளிப்பதிவாளர் விக்ரமன், இசையமைப்பாளர் ரேகான், இயக்குனர் ரிஷி, கவிதாலயா நிறுவனத்தைச் சார்ந்த ராஜேந்திரன், ரோஷன் கேபி அவர்களின் கார் ஓட்டுநர் ஆர் கோவிந்தராஜன், எடிட்டர்கள் அசோக், ஆனந்த் கே பாலச்சந்தர் ரசிகர் சங்க பொருளாளர் எம் முகமது இலியாஸ், செயற்குழு உறுப்பினர்கள் நடிகர் கலைமாமணி பூவிலங்கு மோகன், எடிட்டர் ராமமூர்த்தி இணைச் செயலாளர் கண்ணப்பன், ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர் மேலும் அவரது பிறந்த நாளை ஒட்டி வளசரவாக்கத்தில் அமைந்துள்ள அக்ஷயா முதியோர் இல்லத்தில் இருக்கும் 50 முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.