நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”
சென்னை:
Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”. இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஶ்ரீகாந்த் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது.
இவ்விழாவினில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது..,
‘மஹா’ திரைப்படம் ஒரு மகளுக்கும், தாய்க்கும் இடையேயான பந்தத்தை கூறும் படம். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாப பங்களிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் சிறப்பான திரைப்படத்தையும், ஒரு முக்கியமான கருத்தையும் தந்துள்ளார். நடிகர் சிம்பு சிறந்த நடிகர், அவர் இந்த படத்தில் சிறப்பான நடிப்பினை வழங்கியுள்ளார். இந்த படம் மெஹா ஹிட் அடிக்க வாழ்த்துகிறேன். படம் நிச்சயம் பெரிய வெற்றியடையும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இயக்குநர் சீனுராமசாமி பேசியதாவது..,
படத்தின் டிரைலர் ஹாலிவுட்க்கு இணையாக வந்திருக்கிறது, அதற்கு காரணம் ஒளிப்பதிவாளர் தான். பெண் குழந்தை களுக்கான ஒரு முக்கியமான கருத்தை முன்னெடுத்து வைக்கும் படமாக இது இருக்கிறது. இப்படியான படத்தில் முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளது சந்தோசமளிக்கிறது. ஹன்ஷிகா உடைய நடிப்பு பிறரை ஈர்க்கும் வகையில் இருக்கிறது. அவருக்கு எனது பாராட்டுகள். படம் நிச்சயம் வெற்றியடையும்.
நடிகர் தம்பி ராமையா பேசியதாவது..,
இந்த படத்தின் கதை தான் எங்களை ஒன்றிணைத்தது. இக்கதையை ஒத்துகொண்ட ஹன்ஷிகா தான் இந்த படத்தின் அச்சாணி. இந்த படத்தில் அவருடைய நடிப்பில், நாம் முன்னர் பார்த்த ஹன்ஷிகாவை தாண்டி, ஒரு சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். நடிகர் சிம்பு இந்த படத்தை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பார்வையாளர்களுக்கு நிச்சயம் பிடித்தமான ஒரு படமாக இது இருக்கும். இந்த படம் தயாரிப்பாளர் மதியழகனுக்கு நல்ல பெயரை பெற்று தரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகர் ஆரி பேசியதாவது..,
இந்தப் படத்தில் ஹன்ஷிகா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தில் சிம்பு கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார், அது பெருமையான விஷயம். நாயகியை மையமாக வைத்து உருவாகும் படத்தில் பெரிய நடிகர்கள் இணைந்து நடிப்பது மகிழ்ச்சி. படத்தின் டிரைலரை பார்க்கும் போது, ஒரு கதையை ஆழமாக சொல்லியுள்ளார்கள் என தெரிகிறது. இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ஹன்ஷிகா திறம்பட நடித்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவாளர், கலை இயக்குனர், இசையமைப்பாளர் என அனைவரும் சிறப்பான உழைப்பை கொடுத்துள்ளனர். இந்த படம் பார்வையாளர்களுக்கு விருந்தாக இருக்கும். நல்ல படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
RK செல்வமணி பேசியதாவது..,
சினிமாவின் மேல் பெரிய காதல் கொண்டவர் மதியழகன், அவருக்கு இந்த படம் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். இந்த படத்தின் டிரைலர் எனக்கு புலன் விசாரணை படத்தை ஞாபகப்படுத்தியது. படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளரும் சிறப்பான பணியை செய்துள்ளனர். ஹன்ஷிகா இந்த படத்திற்காக முழு அர்பணிப்பை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் உடைய பணி இந்த படத்தில் அட்டகாசமாக இருக்கிறது. நீங்கள் அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன். நன்றி.
ஒளிப்பதிவாளர் லக்ஷ்மணன் பேசியதாவது..,
இந்த படத்தில் விஷுவல் நன்றாக வர வேண்டுமென அதற்கு பெரிய பட்ஜெட்டையும் தேவையான ஒத்துழைப்பு அனைத்தையும் கொடுத்தார் தயாரிப்பாளர் மதியழகன். ஹன்ஷிகா உடைய நடிப்பை கேமரா வழியாக பார்க்கும் போது, நான் அதிர்ந்து நின்றேன். அவர் இப்படத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் மானசி அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளார். குணசித்திர நடிகர்கள் தங்கள் நடிப்பு திறமையால் இந்த படத்தை மேம்படுத்தியுள்ளனர். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர். படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை ஹன்சிகா பேசியதாவது..,
மஹா படம் எனக்கு வந்த போது, இது எனது 50 ஆவது படம் என்று நான் நினைக்கவில்லை. என் 50 ஆவது படமாக மஹா திரைப்படம் அமைந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். படத்தின் நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்து, படத்தை மெருகேற்றியுள்ளனர். படம் மிக சிறப்பாக வந்துள்ளது. நண்பர் சிம்பு படத்திற்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவருக்கு இந்நேரத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன். படத்திற்கு உங்களுக்கு ஆதரவு தேவை . நன்றி.
தயாரிப்பாளர் மதியழகன் கூறியதாவது..,
இந்த படத்திற்கு இதுவரை ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. மிக அற்புதமாக இப்படத்தை உருவாக்கிய படக்குழுவிற்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இப்படத்திற்கு உங்கள் ஆதரவை தருவீர்கள் என்று நம்புகிறேன்.
முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி கலக்கியிருக்கும் “மஹா” திரைப்படத்தில் நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, பேபி மானஸ்வி மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இயக்குநர் U.R. ஜமீல் இயக்கியுள்ள, இப்படத்தில் அஞ்சு விஜய் இணை இயக்கம் செய்துள்ளார்.
இசையமைப்பாளர் – ஜிப்ரான்
ஒளிப்பதிவு – J. லக்ஷ்மன் ( M.F.I)
படத்தொகுப்பு – J.R. ஜான் ஆப்ரஹாம்
கலை இயக்கம் – மணிமொழியன் ராமதுரை
பாடல்கள் – கார்கி, விவேகா, சௌந்தரராஜான்
நடன அமைப்பு – காயத்திரி ரகுராம், ஷெரிஃப்
சண்டைப்பயிற்சி- தினேஷ் சுப்பராயன், ஸ்டன்னர் ஷாம்
ஸ்டில்ஸ் – ரவீந்திரன் KM
சவுண்ட் இன்ஞ்னியர் – அருண் குமார்
ஆடியோகிராபி – M.R. ராஜாகிருஷ்ணன்
பப்ளிஷிட்டி டிசைன் – ஜோஷப் ஜாக்சன்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D one
தயாரிப்பு – Etcetera Entertainment & Malik Streams Corporations