இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பான் இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள திரைப்படம் “லைகர்”
சென்னை:
பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து Puri connects நிறுவனம் தயாரிக்க, பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பான் இந்திய நடிகர் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள திரைப்படம் லைகர் (Saala Crossbreed). பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் 25 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் பதிப்பை தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் தனது Studio 9 நிறுவனம் சார்பில் வெளியிடுகிறார். பட வெளியீட்டை ஒட்டி நாயகன் விஜய் தேவரகொண்டா, நாயகி அனன்யா பாண்டே, தயாரிப்பாளர் விநியோகஸ்தர் RK சுரேஷ் ஆகியோர் பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்
இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் விநியோகஸ்தர் R K சுரேஷ் பேசியதாவது..
விஜய் தேவரகொண்டாவிற்கு தமிழகத்தில் அறிமுகம் தேவையில்லை அவருக்கு இங்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடைய இந்த படத்தினை நான் வெளியிடுவது பெரு மகிழ்ச்சி. இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றியை பெறும். இனி விஜய் தேவரகொண்டா தொடர்ந்து தமிழ்ப்படங்கள் செய்வார் என நம்புகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. பின்னர் விஜய் தேவரகொண்டா நாயகி அனன்யா பாண்டேவிற்கு தமிழில் பேச கற்றுக்கொடுத்ததாக கூறினார்.
நாயகி அனன்யா பாண்டே பேசியதாவது…
நான் உங்களை காதலிக்கிறேன். உங்களுக்காக இந்த வார்த்தைகளை தமிழில் சொல்ல கற்றுக்கொண்டு வந்தேன். இந்தப்படம் மிகப்பிரமாண்டமான மாஸான திரைப்படம். இத்திரைப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும். இப்படியானதொரு படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது பெருமை. இத்திரைப்படம் மிகச்சிறப்பான அனுபவத்தை தந்தது. இப்படத்தை பார்த்து ரசியுங்கள் அனைவருக்கும் நன்றி.
நடிகர் விஜய் தேவரகொண்டா பேசியது…
தமிழகத்திற்கு வந்து ரொம்ப காலம் ஆகிவிட்டது. ‘நோட்டா’ படத்தின் போது என் மீது தமிழக மக்கள் காட்டிய அன்பு மறக்க முடியாதது. இந்தப்படம் ஒரு அற்புதமான ஆக்சன் படம். உலகெங்கிலும் உள்ள அனைத்து ஆக்சன் ரசிகர்களையும் கவரும் வண்ணம் படம் உருவாகியுள்ளது. நான் தமிழ் படங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். தமிழ் இயக்குநர்களுடன் பணிபுரிய ஆசை உள்ளது. பா ரஞ்சித், வெற்றி மாறன், லோகேஷ் போன்றோருடன் உரையாடி இருக்கிறேன் வரும் காலத்தில் அவர்களது படங்களில் கண்டிப்பாக நடிப்பேன். ‘லைகர்’ பொறுத்தவரை இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். இது மிக அற்புதமான அனுபவத்தை தரும் நன்றி.
விஜய் தேவர்கொண்டா, பூரி ஜெகன்நாத், கரண் ஜோஹர், சார்மி கவுரின் லைகர் (Saala Crossbreed) திரைப்படத்தின் “அக்டி பக்கடி” பாடல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான Dharma Productions உடன் இணைந்து Puri connects நிறுவனம் தயாரிக்கிறது. பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா ஆகியோர் இணைந்து படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகின்றனர்.
விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்கிறார், தாய்லாந்தைச் சேர்ந்த கிச்சா ஸ்டண்ட் பணிகளை கவனித்து கொள்கிறார். இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த பான் இந்தியா திரைப்படம் 25 ஆகஸ்ட் 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய், விசு ரெட்டி, அலி, மகரந்த் தேஷ் பாண்டே மற்றும் கெட்அப் ஸ்ரீனு.
தொழில்நுட்பக் குழு:
இயக்குனர்: பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், கரண் ஜோஹர் மற்றும் அபூர்வா மேத்தா
பேனர்கள்: Puri Connects மற்றும் Dharma Productions
ஒளிப்பதிவு: விஷ்ணு சர்மா
கலை இயக்குனர்: ஜானி ஷேக் பாஷா
எடிட்டர்: ஜுனைத் சித்திக்
ஸ்டண்ட் இயக்குனர்: கிச்சா