‘ட்ராமா’ திரை விமர்சனம்!

95

சென்னை:

தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இருக்ககூடிய காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பதவி ஏற்கிறார் ஜெய்பாலா. அவருடன் அதே காவல் நிலையத்தில் ஒரு பெண் காவலர், மற்றும் ஆண் காவலர்கள் பணிபுரிகிறார்கள். அந்த காவல் நிலையத்தில் சார்லி  ஏட்டாக பணியில் இருக்கிறார். ஜெய்பாலாவின் காதலியான காவ்யா பாலுவின் பிறந்தநாள் தினத்தை சக காவலர்கள்  முன்னிலையில் அந்த காவல் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். இதற்கிடையே காவல் நிலைய மின்பொருட்களை பழுது பார்க்க இரண்டு பேர் வருகிறார்கள். சில நேரத்திற்கு பிறகு காதல் ஜோடி ஒன்று பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்திற்குள் நுழைகிறது. இந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் துண்டிக்க, அந்த காவல் நிலையத்தில் இருக்கும் ஏட்டு சார்லியை கொலை செய்துவிடுகின்றனர். அந்த கொலையை செய்தது யார்? என்பதை கண்டுபிடிக்க காவல்துறை உயர் அதிகாரியான கிஷோர் அங்கு வருகிறார், இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளியை எப்படி கிஷோர் கண்டுபிடிக்கிறார்? என்பதுதான் ‘ட்ராமா’ படத்தின் மீதிக்கதை!

ஜெய்பாலா-காவ்யாபெல்லு ஆகியோரின் காதல் காட்சிகள் இளமைத் துள்ளலாக இருந்தாலும் எடுபடவில்லை.  ஜெய் பாலா, வின்சென்ட் நகுல், வினோத் முன்னா, காவ்யா பெல்லு ஆகியோரின்  நடிப்பு ரசிக்க முடியவில்லை. புதுமுக நடிகர்கள் என்ற எண்ணத்தை வரவைத்தாலும் . இவர்கள் நடிப்பில் அதிக கவனம் செலுத்தவில்லை. சார்லி, வின்செண்ட் நகுல் உள்ளிட்ட காவல் துறையினருக்குள்ளேயே ஏற்படும்  மோதல்கள், காவல்நிலைய எதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்றன. இப்படத்தில் நடித்திருப்பவர்கள் அனைவருமே புதுமுகங்களாக இருப்பதோடு, நடிக்கவும் தெரியவில்லை.

இப்படத்தில் தெரிந்த முகமாக காவல்துறை அதிகாரியாக வரும் கிஷோர் எதார்த்தமான நடிப்பின் மூலம் கவனம் பெறுகிறார்.  காவல்துறை உயரதிகாரிகளுக்கு உதாரணமாக தனது முதிர்ச்சியான நடிப்பை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

ஒரு காவல் நிலையத்தில் நடைபெறும் கதையை எடுத்துக் கொண்டு அதை திரைப்படமாக எடுக்க முயற்சி செய்து இருப்பதை  பாராட்டக்குரிய விஷயமாக இருந்தாலும் படத்தின் திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லாமல் செய்து விட்டார்கள்.  ஒரு சில காட்சிகளில் ஒரே டேக்கில் எடுத்து பாராட்டுக்களை பெறுகிறார் இயக்குனர் அஜூ கிழுமலா. திரைக்கதையில் விறுவிறுப்பை ஏற்படுத்தியிருந்தால் காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கும். ஒரே ஷாட்டில் எடுப்பதற்கு கடினமாக உழைத்திருந்தாலும், அந்த உழைப்பு படத்தில் தெரியாமல் போனதுதான் பெரும் வேதனை.படத்தின் காட்சிகள் மிகவும் பொறுமையாக செல்வது தொய்வுக்கு  காரணமாகி விடுகிறது. ஒரு காவல்நிலையத்தில், ஓர் இரவில்,  ஒரே ஷாட் என்கிற புதிய முயற்சிகளைக் கையிலெடுத்தாலும், அதில் தோல்வியை  தழுவி இருக்கிறார் இயக்குநர் அஜுகிழுமலா.

காவல் நிலையத்திற்குள் நடக்கும் கதையை மிக சிறப்பாகஅமைய, ஒளிப்பதிவாளர் ஷினோஸ்  ஒளிப்பதிவில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி படமாக்கியிருக்க வேண்டும்.  பிஜிபாலின் இசை ரசிக்கும்படி இல்லை சுமார்ரகம்தான்.

மொத்தத்தில், ‘ட்ராமா’ படத்தை ரசிக்கமுடியவில்லை.

ரேட்டிங் 2/5

RADHAPANDIAN.