‘ரெண்டகம்’  திரை விமர்சனம்!

117

சென்னை:

ஆர்யா & ஷாஜி நடேசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘ரெண்டகம்’  இப்படத்தில் அரவிந்த்சாமி –குஞ்சாகோ போபன் இருவரும் இணைந்து நடித்து இருக்கின்றனர். மற்றும் இப்படத்தில் ஜாக்கிஷெராப், ஆடுகளம் நரேன், ஈஷா ரெப்பா, அமல்டா லிஸ், ஜின்ஸ் பாஸ்கர், சியாத் யாது, அனீஷ் கோபால், லபான் ரனே, ஸ்ரீகுமார் மேனன்  ஆகியோர் நடித்திருக்கின்றனர்.  இப்படத்தின் கதையை பொறுத்தவரையில் குஞ்சாக போபன் தன் காதலியுடன் ஸ்வீடன் நாட்டிற்குச் சென்று அங்கு ஏதாவது ஒரு பிசினஸ் செய்து பிழைத்துக் கொள்ளலாம். அதற்குண்டான பணம் நமக்கு தேவைப்படுகிறது.  ஆகவே நான் பணத்தை ரெடி செய்கிறேன் நீ எப்படியாவது என்னுடன் ஸ்வீடன் நாட்டிற்கு வந்துவிடு என்று காதலிடம் சொல்கிறார். அப்போது ஒரு மர்ம கும்பல் குஞ்சாகோ போபனை  அணுகி,  அசையனார் என்ற தாதா கொல்லப்பட்டு விட்டதாகவும் அவரது உதவியாளரான தாவூத் என்கிற டேவிட்,  தலையில் அடிபட்டு பழைய நினைவுகளை இழந்து விட்டதாகவும்  அவர் யார் என்பதை நீ தான் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி நீ கண்டுபிடித்து விட்டால் உனக்கு ஸ்வீடன் நாட்டிற்கு செல்வதற்கு விசா மற்றும் டிக்கெட் எடுத்து கொடுப்போம்….என்கிறார்கள்.

மும்பை தாதாவான அரவிந்த்சாமியும்  மற்றும் அவரது எதிரிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்த போது நினைவுகள் மறந்து விட்டதால் அவருடன் பழகி,  அவரைபழைய நினைவுகளுக்கு கொண்டு வந்து, அவரிடம் உள்ள முப்பது கோடி மதிப்புள்ள தங்கப் புதையல் எங்கு இருக்கிறது என்பதை விவரமாக கேட்டு தங்களிடம் சொல்ல வேண்டும் என்றும் கட்டளையிடுகிறார்கள்.  இந்த சூழ்நிலையில் அரவிந்த்சாமியுடன் உற்சாகமாக  நெருங்கி பழக ஆரம்பிக்கிறார் குஞ்சாகோ போபன். அப்போது எந்த இடத்தில் துப்பாக்கி சண்டை நடந்ததோ அந்த இடத்திற்கு மும்பை தாதா அரவிந்த்சாமியை தனது காரில் அழைத்து செல்கிறார் குஞ்சாகோ போபன். அந்த இடத்தில் அரவிந்த்சாமிக்கு பழைய நினைவுகள் வருகிறதா என்று சில விஷயங்களை பேசுகிறார். இச்சமயத்தில் மதுவை குடித்து விட்டு கடற்கரையில் அரவிந்த்சாமியிடம் தாவூத்..டேவிட் அகிய பெயர்களைச் சொல்லி உளறுகிறார் குஞ்சாக கோபன்.  அப்போது அரவிந்த்சாமி நான் தான் அந்த அசையனார் என்று சொல்லி குஞ்சாக கோபனிடம் நீ யார் என்று கேட்கிறார்.  உன்னை என்னுடன் அனுப்பி வைத்தது யார் என்று கேட்கும் போது அவர் பதில் சொல்ல முடியவில்லை. காணாமல் போன  முப்பது கோடி தங்கப் புதையலை அரவிந்த்சாமியும், குஞ்சாகோ போகனும் கண்டுபிடித்தார்களா? அந்த இடத்தில் என்ன நடந்தது?  என்பதுதான் “ரெண்டகம்” படத்தின் மீதி கதை.

மும்பை தாதாவாக நடித்திருக்கும் அரவிந்த்சாமி மிகவும் அழுத்தமான நடிப்பை சிறப்பான முறையில் வெளிப்படுத்தி இருக்கிறார்.  ஆரம்பத்தில் ஒரு தியேட்டரில் பாப்கார்ன் விற்பவராக வந்து பிற்பகுதியில் தான் யார் என்பதை வெளிப்படுத்தும் போது அனைவரையும் ஆக்ஷன் ஹீரோவாக அதிர வைக்கிறார்.  குஞ்சாக போபனை ஒரு ரவுடி கும்பல் அடிக்கும் போது அந்த இடத்தில் அரவிந்த்சாமி பயங்கரமாக மோதும் சண்டைக் காட்சியில் சிறப்பாக நடித்திருக்கிறார்.  பெரிய தாதாவான  ஜாக்கிஷெராப்பிடம் சென்று அவரை கொலை செய்யும் காட்சி மிரள வைக்கிறது.  தன் அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்கிறார் அரவிந்த்சாமி.

குஞ்சாக போபன் ஒரு வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் தன் உடல் தோற்றத்தை மாற்றி நடித்திருக்கிறார்.  கடைசி கட்ட காட்சியில் அவர் யார் என்பது தெரிந்ததும் நடிப்பில் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறார்.

ஆடுகளம் நரேன், ஈஷா ரெப்போ இருவரின் கதாபாத்திரங்கள் இறுதி கட்ட காட்சியில் எதிர்பாராத விதமாக திருப்பத்தை ஏற்படுத்துகிறது ஆரம்பத்தில் படம் மெதுவாக செல்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு பல திருப்பங்கள் எதிர்பாராதவையாக சிறப்பாக இருக்கிறது.

கேங்ஸ்டர் கதையை வித்தியாசமான முறையில் இயக்கியிருப்பதோடு, காட்சிகளில் மட்டும் இன்றி கதாப்பாத்திரங்கள் மூலமாகவும்.இயக்குனர் பெளினி கதையை பதற்றமாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கியிருப்பதை பாராட்டலாம்.

கௌதம் ஷங்கரின் ஒளிப்பதிவு கதைக்கு வலு சேர்த்து இருக்கிறது. பின்னணி இசை ஒவ்வொரு காட்சிகளுக்கும் தீனி போடுகிறது.

மொத்தத்தில் ‘ரெண்டகம்’ படம் அனைவரும் பார்க்கக்கூடிய  ஆக்ஷன்  படம்தான்.

ரேட்டிங் 3/5

RADHAPANDIAN.