அயோத்தியில் வெளியிடப்படும் நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படம் ‘ஆதி புருஷ்’

95

சென்னை:

‘பாகுபலி’ படத்தின் மூலம் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் பிரபாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஆதி புருஷ்’ எனும் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படும் இடமும், தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பாலிவுட்டில் வெளியான ‘தன்ஹாஜி: தி அன்சங் வாரியர்’ என்ற படத்தை இயக்கி, தேசிய விருதை வென்ற இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் ‘ஆதி புருஷ்’. இதில் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடித்திருக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்களான சயீஃப் அலி கான் மற்றும் சன்னி சிங் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

‘ஆதி புருஷ்’ படத்தின் அறிவிப்பு வெளியானது முதல் ரசிகர்களிடத்தில் இப்படத்தை பற்றிய ஆர்வமும், எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. படத்தைப் பற்றிய புதிய தகவலுக்காக காத்திருந்த அவர்களுக்கு, படக் குழு, இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டரை வெளியாகும் தேதியும், இடமும் அறிவித்து உற்சாகமடைய செய்திருக்கிறது. அக்டோபர் இரண்டாம் தேதி அன்று உத்தரப்பிரதேசத்தின் புனித பூமியான அயோத்தியில் உள்ள சரயு நதிக்கரையில் இப்படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியிடப்படவிருக்கிறது.மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் படத்தின் இயக்குநர் ஓம் ராவத், தயாரிப்பாளர் பூஷன் குமார், பிரபாஸ் மற்றும் படத்தின் நாயகி கீர்த்தி சனோன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

தீமைக்கும், நன்மைக்கும் இடையேயான போட்டி குறித்து, ராமாயணத்தை மையப்படுத்தி தயாரான இந்த திரைப்படம், உத்திரப்பிரதேசத்தில் உள்ள இந்து மதம் சார்ந்த புனித நகரமாக கருதப்படும் ராமர் பிறந்த பூமியில், ஆதி புருஷ் படத்தின் டீசர் மற்றும் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு நடைபெறுவது பொருத்தமானதாக அமைந்திருக்கிறது. இதனிடையே இயக்குநர் ஓம் ராவத் இயக்கிய ‘ஆதி புருஷ்’ திரைப்படம், டி சிரீஸ் மற்றும் ரெட்ரோஃபைல்ஸ் ஆகிய முன்னணி பட தயாரிப்பு நிறுவனங்களின் தயாரிப்பில், அகில இந்திய அளவில் பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த ‘ஆதி புருஷ்’ திரைப்படம், ஐமேக்ஸ் மற்றும் 3 டி யில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

A monumental teaser launch for the most awaited film, Adipurush!

From its stellar casting to the next outing of the National award winning director, Om Raut post the success of the iconic film, Tanhaji: The Unsung Warrior , the audiences have been waiting to know more and see more of Adipurush. Starring Prabhas, Kriti Sanon, Saif Ali Khan and Sunny Singh, the film has grabbed the eyeballs since its inception. After a long wait, the much-anticipated teaser and poster of the film is set to be unveiled on 2nd October on the bank of Sarayu in the holy land of Ayodhya, Uttar Pradesh. The grand event will be graced with the presence of superstar Prabhas and Kriti Sanon along with the Director Om Raut and Producer Bhushan Kumar.

The film is based on the epic Ramayana, showcasing the triumph of good over evil. This religious town in Uttar Pradesh is also the birthplace of Lord Ram, making the location much relevant for this grand event. The poster, as well as the teaser, will reflect the scale of the film. Adipurush being the mega Indian film produced by T Series and Retrophiles , directed by Om Raut is a visual extravaganza slated to release on January 12, 2023 in IMAX and 3D.