சென்னை:
தமிழ் சினிமாவின் பெருமையான, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை கொண்டாட, அது போன்ற பிரம்மாண்டமான சில விஷயங்களும் நமக்கு தேவைதானே?
நாள் 1: இதனை ஒட்டி, வசந்த் & கோ’ஸ் சென்னை பிரிவின் நிர்வாக இயக்குநர் முதல் நாளில் பஸ் டூர் ஒன்றை தொடங்கி வைக்கிறார். அதே போல, மாலை சென்னை நகரத்துக்குள் மற்றொரு ஃபன் டூர் ஒன்றை லலிதா ஜுவல்லர்ஸ்ஸின் நிர்வாக இயக்குநர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார்.
நாள் 2-5: இரண்டாம் நாளில், 150+ வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராண்ட் பிரதிநிதிகளுடன் உற்சாகமான நடைப்பயணம் இருக்கும். மேலும், இந்த பஸ் டூர் சத்யம் சினிமாவில் தொடங்கி எங்கெல்லாம் பார்வையாளர்கள் ‘பொன்னியின் செல்வன்1’ படத்தை பார்த்து கொண்டாடி அன்பை தருகிறார்களோ அங்கெல்லாம் செல்ல இருக்கிறது.
படத்தில் உள்ள நட்சத்திரங்களின் படங்களும் இந்தப் பேருந்தில் மக்களின் கவனத்தை குவிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாது வசதியான plush இருக்கைகள், பேருந்துக்குள்ளே கழிப்பறை, ஸ்நாக் பார் போன்ற பல வசதிகள் செய்யப்பட்டு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத ஒரு புதுமையான அனுபவத்தை கொடுக்கும்.
PVR-ல் விளம்பரம் செய்யுங்கள்!
இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் இது தொடர்பான அனைத்து சுவாரஸ்யமான விஷயங்களையும் பார்க்க தவறாதீர்கள்!