தனது திருமண அறிக்கையை வெளியிட்டுள்ள தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண்!

98

சென்னை:

‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர் ‘நூறு கோடி வானவில்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ‘டீசல்’ படத்தில் நடித்து வருகிறார்.

ஹரிஷ் கல்யாண் அறிக்கை இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிக்கை ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன்.

உங்கள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தை துவங்கும் நேரத்தில் இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசிர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டு தனது வருங்கால மனைவியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதனையொட்டி ரசிகர்கள் ஹரிஷ் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.