சென்னை:
Zee Studios release the first-ever teaser of its most awaited thriller drama Mili. Directed by National award winner Mathukutty Xavier, ‘Mili’ will see Janhvi play a lead protagonist, yet again pulling off a challenging role which she has not attempted on screen before.
The film’s teaser looks gripping and intriguing and showcases a glimpse of a breathtaking sequence of Janhvi Kapoor’s serious character play. Capturing a struggling Janhvi amidst a freezing ambience, the teaser aptly lets us a peek into the film’s thrilling storyline. Producer Boney Kapoor has managed a casting coup with his & Zee Studios’ next production, ‘Mili’, featuring his daughter for the first time!
Though the details about the film’s story and Janhvi’s character have been kept under wraps by the makers, one of the biggest USPs of the film is Janhvi Kapoor and Boney Kapoor working together for the first time. Produced by Zee Studios, Boney Kapoor and directed by Mathukutty Xavier, ‘Mili’ is scheduled to release in cinemas on 4th November 2022.
மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ள த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் & போனி கபூர் இணைந்து வெளியிட்டுள்ளனர்!
ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் த்ரில்லர் ட்ராமாவான ‘மிலி’ டீசரை ஜீ ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளனர். ‘மிலி’ படத்தை தேசிய விருது பெற்ற மதுகுட்டி சேவியர் இயக்கி உள்ளார். இதில் ஜான்வி கபூர் கதை நாயகியாக நடிக்க உள்ளார். ஜான்வி கபூர் இதற்கு முன்பு திரையில் முயற்சித்திடாத வித்தியாசமான ஒரு சவாலான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடிக்கிறார் . படத்தின் டீசர் பரபரப்பாகவும், பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையிலும் அதே சமயம் ஜான்வி கபூரின் நடிப்பும், அவருடைய சீரியஸான கதாபாத்திரமும் இன்னும் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசரில் உறைந்திருக்கும் சூழலில் ஜான்வி சிக்கியிருக்கும் ஒரு காட்சி, கதை எந்த மாதிரியான அனுபவத்தை பார்வையாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.
தயாரிப்பாளர் போனி கபூர் சொந்த தயாரிப்பில் ஜீ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தனது மகளை முதன்முறையாக நடிக்க வைத்திருக்கிறார். படத்தின் விவரம் மற்றும் ஜான்வியின் கதாபாத்திரம் குறித்து இன்னும் தயாரிப்புத் தரப்பு முழுமையாக வெளியிடவில்லை என்றாலும் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் என்பது போனி கபூர் மற்றும் ஜான்வி கபூர் இருவரும் முதல் முறையாக ஒரு படத்திற்காக இணைந்து வேலை பார்ப்பதுதான்.
ஜீ ஸ்டுடியோஸ், போனி கபூர் தயாரிப்பில் மதுகுட்டி சேவியர் இயக்கத்தில், ‘மிலி’ திரைப்படம் இந்த வருடம் நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.