சென்னை:
மெட்ராஸ் ஸ்டுடியோஸ் & அனுஷ் பிராபகர் ஃப்லிம்ஸ் வழங்கும் ஃபிலிம்மேக்கர் K விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் – கெளதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கும் “13” டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது
தனித்துவமான கருத்துகளுடன் புதிய கதையம்சத்துடன் கூடிய படங்கள் நிச்சயம் உலக சினிமா பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும். அந்த வரிசையில், K விவேக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார்- கெளதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள “13” படத்தின் டீசர் நமக்குள் படம் குறித்தான ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒரு நிமிடம் 12 செகண்ட்ஸ் ஓடக்கூடிய இந்த டீசர் புதிரான காட்சி அமைப்புகள், இசை மற்றும் ஒலியுடன் அமைந்திருக்கிறது. ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் ஸ்டைலிஷான கெளதம் வாசுதேவ் மேனன் என இருவரும் தங்கள் நடிப்பின் மூலம் கதைக்கு வலுவூட்டி உள்ளனர். இவர்கள் இருவரும் திரையில் இணைந்து வருவதை பார்வையாளர்கள் தவற விடக்கூடாது எனும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
டீசரில் கெளதம் வாசுதேவ் மேனன், ‘ஆறு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் வழக்கு தீர்க்கப்படாமல் உள்ளது’ எனத் தெரிவித்து கதையின் முன்னுரையை பார்வையாளர்களுக்குச் சொல்லி கதைக்கான ஆர்வத்தையும் கணிப்பையும் விதைத்துள்ளார்.
அன்ஷூ பிராபகர் ஃபிலிம்ஸூடன் இணைந்து மெட்ராஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை K விவேக் எழுதி இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆதித்யா கதிர், ஆத்யா பிரசாத், பவ்யா த்ரிகா மற்றும் ஐஷ்வர்யா ஆகிய மற்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பக் குழு விவரம்:
இசை: சித்துகுமார்,
DOP: C.M. மூவேந்தர்,
எடிட்டர்: JF காஸ்ட்ரோ,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஷங்கர்,
கலை இயக்குநர்: நாஞ்சில் P.S. ராபர்ட்,
பாடல் வரிகள்: மோகன் ராஜன், விக்னேஷ் ராமகிருஷ்ணா,
நடனம்: சந்தோஷ்,
ஸ்டைலிங் மற்றும் உடை: ஹீனா,
சண்டைப் பயிற்சி: ‘ஸ்டண்ட்’ ராம்குமார்,
DI: Accel Media,
ஒலி வடிவமைப்பு & கலவை: ஜெய்சன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா D’One