சென்னையில் சுப்பிரமணியன் சுவாமி: ஆளுநரை சந்திக்க திட்டம்

243

தமிழக அரசியல் தொடர்ந்து விறுவிறுப்பு அடைந்து வருகிறது. முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா தலைமையில் அதிமுக இரண்டாக பிரிந்துள்ளது. இதையடுத்து ஆளுநரை சந்தித்து, இருதரப்பும் தங்கள் தரப்பு கோரிக்கைகளை வைத்தனர். அப்போது ஆட்சி அமைக்க சசிகலா, ஆதரவு எம்.எல்.ஏக்கள் பட்டியலுடன் உரிமை கோரினார். இதுவரை ஆளுநர் தரப்பில் இருந்தும் எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை.

இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள சொகுசு பங்களாவிற்கு சசிகலா புறப்பட்டு சென்றார். அங்கு எம்.எல்.ஏக்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சென்னை வந்துள்ளார். அவர் ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார். சசிகலா முதலமைச்சர் பதவி ஏற்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.