தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் நர்மதா உதயகுமாருக்கும் வெகு விமரிசையாக நடைபெற்ற திருமணம்!
சென்னை:
‘பியார் பிரேமா காதல்‘, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்‘, ‘தாராள பிரபு‘ போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர் ‘நூறு கோடி வானவில்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து ‘டீசல்‘ படத்தில் நடித்து வருகிறார்.இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிக்கை ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அதில், “எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். உங்கள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
சென்னை திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கும் நர்மதா உதயகுமாருக்கும் இருவீட்டார் முன்னிலையில் வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது. இவருக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.