டிஸ்னி ஹாட் ஸ்டார் – கவிதாலயா தயாரிப்பில் உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதியபடம்!
சென்னை:
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த கவிதாலயா மற்றும் முன்னணி ஓடிடி தளமான ஹாட் ஸ்டார் இணைந்து தயாரிக்க உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் குமார், அனஸ்வரா ராஜன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது.
புஷ்பா கந்தசாமி மற்றும் கந்தசாமி பரதன் தயாரிக்கும் இப்படத்தை நாளை, சக்கர வியூகம் உள்ளிட்ட படங்களை இயக்கியவரும், ஃபேமிலி மேன் -2 , ஆஃபிஸ் உள்ளிட்ட தொடர்களிலும் பல வெற்றிப்படங்களிலும் நடித்தவருமான உதய் மகேஷ் கதை – திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவரின் கதை-திரைக்கதையில் கே பாலச்சந்தர் இயக்கிய சாந்தி நிலையம் மிகவும் பிரபலமான தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இளைஞர்களின் நாயகன் ஜி வி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். மலையாளத்தில் குளோப் என்ற குறும்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனஸ்வரா ராஜன். அவரது முதல் திரைப்படம் உதஹரணம் சுஜாதா (2017). வணிக ரீதியாக வெற்றியடைந்த மலையாளப் படங்களான தண்ணீர் மாதன் தினங்கள் (2019) மற்றும் சூப்பர் சரண்யா (2022) மூலம் அவர் மேலும் பிரபலமடைந்தார். பாடகியாகவும் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று குழந்தைகள் மத்தியில் பிரபலமானவர்.
நாயகன் ஜி வி பிரகாஷ்குமாருக்கும் அவரின் 6 வயதான அக்கா மகளுக்கும் இடையில் நடைபெறும் பாச உணர்வினை அழகிய குடும்ப பின்னணியில் விவரித்து அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஜனரஞ்சகமாக உருவாகிறது இப்படம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெறுகிறது.
சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், மதுசூதனன், குமரவேல், முத்துக்குமார், டேனியல், நமோநாராயணன், மயில்சாமி, முத்துக்காளை, சௌந்தர், பேபி மேக்னா சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஹிருதயம் உள்ளிட்ட பல மலையாள வெற்றிப்படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிய ஹேஷம் அப்துல் வஹாப் இசையமைக்க, யு கே வசந்தகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை செய்கிறார்.
படத்தொகுப்பை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்கிறார். ஷிவா யாதவ் கலை வடிவமைப்பு பணிகளை செய்கிறார், பாடல்களை பார்வதி மீரா எழுதியுள்ளார், சண்டை பயிற்சி பணிகளை ஜி என் முருகன் கையாள்கிறார்.
இதர குழுவினரின் விவரம் வருமாறு:
நடனம் – கல்யாண்குமார்
உடைகள் – தனபால்
உடைகள் வடிவமைப்பு – வினோத்
மேக்கப் – குப்புசாமி
இணை இயக்கம் – மணிபாஸ்கர் – மணிமாறன்
தயாரிப்பு மேற்பார்வை – ஆர் ராம்பிரபு
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – பிரதீப் ரேயான்
நிர்வாக தயாரிப்பு – ஹாட் ஸ்டார்- செந்தில்
நிர்வாக தயாரிப்பு – கவிதாலயா -எம் மதன்
திரைக்கதை – உதய் மகேஷ், சபாபதி ஷண்முகம், ஜி நரேன்குமார்
வசனம் – உதய் மகேஷ், சபாபதி ஷண்முகம்
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்
Shooting commences for GV Prakash Kumar-starrer new film directed by Udhay Mahesh and produced by Disney Hot Star – Kavithalaya
Kavithalaya, a production house floated by legendary filmmaker K Balachander is home to many powerhouse talents and blockbuster, trendsetter movies. It has joined forces with leading OTT platform Hotstar to produce a new movie directed by Udhay Mahesh starring GV Prakash Kumar and Anaswara Rajan in the lead roles.
Udhay Mahesh, who has helmed films such as Naalai, Chakra Vyugam and acted in several hit films and webseries including Family Man-2 and Office serial, has written the story, screenplay and dialogues for this film produced by Pushpa Kandasamy and Kandaswamy Bharathan
It is worth mentioning that Udhay Mahesh wrote the story and screenplay for the famous serial ‘Shanthi Nilayam’ directed by K Balachander.
Youth sensation GV Prakash Kumar is paired with Anaswara Rajan in the lead role for this film. Anaswara Rajan made her acting debut in the Malayalam short film Globe. Her first feature film was Udaharanam Sujatha (2017). She gained popularity through the commercially succesful Malayalam films Thaneer Mathan Dinangal (2019) and Super Sharanya (2022). She has also participated in many shows as a singer and is popular among kids.
The movie is about the emotional bonding between G V Prakash Kumar and his 6-year-old niece. The film is being made in a beautiful family setting that will be enjoyed by all section of the audiences. The shooting of the yet-to-be-titled film commenced today in Chennai.
Subbu Panchu, Devadarshini, Aadukalam Naren, Madhusudhanan, Kumaravel, Muthukumar, Daniel, Namonarayanan, Mayilasamy, Muthukkalai, Soundar, Baby Meghna Suresh and others are also part of the cast. Hesham Abdul Wahab, who has worked as the music director for several Malayalam hits including Hridayam, has scored the music and U K Senthilkumar is handling the cinematography for the film.
Editing is by Lawrence Kishore. Shiva Yadav is doing the art design, Parvathy Meera is penning the songs and GN Murugan is doing the stunt choreography.
Dance choreography – Kalyankumar
Costumes – Dhanapal
Costume Design – Vinod
Makeup – Kuppusamy
Co-Director – Manibhaskar – Manimaran
Production Supervision – R Ramaprabu
Product Coordination – Pradeep Rayan
Executive Producer – Hot Star- Senthil
Executive Producer – Kavithalaya – M Madhan
Screenplay – Udhay Mahesh, Sabapathi Shanmugam, G Narenkumar
Dialogues – Udhay Mahesh, Sabapathi Shanmugam
PRO – Nikil Murukan