மத்திய கலாச்சார அமைச்சகத்துடன் இணைந்து கலா பிரதர்ஷினி நடத்தும் இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா!
சென்னை:
மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் கலா பிரதர்ஷினி சார்பாக இசை மேதை பத்மஸ்ரீ கண்டசாலா வெங்கடேஸ்வர ராவின் நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா மேற்கொண்டுள்ளார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு மற்றும் மத்திய சுற்றுலா, கலாச்சாரம், வடகிழக்கு பகுதி மேம்பாடு அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி ஆகியோர் டிசம்பர் 4 அன்று சென்னை மியூசிக் அகாடெமியில் இந்நிகழ்வை துவக்கி வைக்கின்றனர்.
இளம் கலைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக தேசிய மற்றும் மாநில அளவில் விருதுகள் வென்ற முன்னணி கலைஞர்களோடு பணியாற்றும் வாய்ப்பு அவர்களுக்கு இந்த நிகழ்ச்சி மூலம் கிடைக்கும். தமது கடைசி படைப்பை தலைசிறந்ததாக கண்டசாலா வழங்கினார். அதற்காக அவர் பகவத் கீதையில் இருந்து கவனமாக 100 வசனங்களைத் தேர்ந்தெடுத்தார். கண்டசாலாவின் பகவத் கீதை இசைப் படைப்பு யூடியூபில் 22 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
அவரது நினைவாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் உலகமெங்கிலும் உள்ள
பாரம்பரிய நடனக் கலைஞர்கள் காணொளி மூலம் அஞ்சலி செலுத்துவார்கள்.
இதில் இந்தியாவை சேர்ந்த அனைத்து வைகையான பாரம்பரிய நடனங்களும் இடம் பெரும். இந்த நிகழ்ச்சியில் 40 தேசிய விருது பெற்ற கலைஞர்களும், 60 மாநில விருது பெற்ற கலைஞர்களும் பங்குபெறுவார்கள். இதை தவிர உலகமெங்கும் உள்ள கலைஞர்களின் பிரதிநிதித்துவமும் இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும்.
100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கண்டசாலாவின் பாடல்களை பாடுவார்கள். இதற்காக பல்வேறு இசை பள்ளிகளில் பயின்ற 200 மாணவர்களில் இருந்து சிறந்த 100 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நிகழ்ச்சியின் நிறைவு விழாவாக கலா பிரதர்ஷினியை சேர்ந்த கலைமாமணி பார்வதி ரவி கண்டாசாலா தலைமையில் 100க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடத்துவார்கள். இந்தக்குழு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட இடங்களில் பரதநாட்டியம், குச்சிப்புடி, கதக், கதகளி, ஒடிஸ்ஸி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.
நிகழ்ச்சியில் புத்தக வெளியீடும் இருக்கும், மேலும் கண்டசாலா நினைவு வாழ்நாள் சாதனை விருதுகள் மற்றும் கண்டசாலா கலா
பிரதர்ஷினி புரஸ்கார் வழங்கப்படும். உலகமெங்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியதில் மூலம், பார்வதி ரவி கண்டசாலாவின் கலா பிரதர்ஷினி, 1998 முதல் இந்தியாவின் பாரம்பரிய கலை வடிவங்களை உலகம் முழுவதும் பரப்பும் மற்றும் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 10,000 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் மற்றும் எண்ணற்ற துணைக் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பணியாளர்கள் இந்தக் கலை நிகழ்ச்சிகளின் மூலம் பயனடைந்துள்ளனர்.
பார்வதி ரவி கலைமாமணி, நாட்டிய இளவரசி, பத்ம சாதனா, நாட்டிய மயூரி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்ற பயிற்சியாளர், நடன இயக்குநர் மற்றும் பரதநாட்டிய ஆசிரியர் ஆவார். நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக கலை உலகில் வெற்றிகரமாக வளம் வரும் பார்வதி ரவி இளைஞர்களிடையே பாரம்பரிய கலையை ஊக்குவிக்கும் முயற்சியில் அவரது அமைப்பான கலா பிரதர்ஷினி மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றியும் கண்டுள்ளார்.
***
Centenary celebrations of music maestro Padmashri Shri Ghantasala Venkateswara Rao to be celebrated by Union Ministry of Culture in association with Kala Pradarshini
Former Vice President Shri Venkaiah Naidu and Union Minister for Tourism, Culture and Development of North Eastern Region Shri G. Kishan Reddy to inaugurate the event in Chennai on December 4, 2022. More than 400 artistes, musicians and classical dancers to be showcased by Kalaimamani Parvathi Ravi Ghantasala
The birth centenary of musical genius Padma Shri Ghantasala Venkateswara Rao will be celebrated by the Union Ministry of Culture in association with Kalaimamani Parvathi Ravi Ghantasala’s Kala Pradarshini. Former Vice President of India Shri Venkaiah Naidu and Union Minister for Tourism, Culture and Development of North Eastern Region Shri G Kishan Reddy will inaugurate the event on December 4, 2022 at The Music Academy, Chennai. Minister of Tamil Language Shri Thangam Thennarasu will preside.
The event will give young artistes and child prodigies an opportunity to work with leading artistes who have won state and national levels. Ghantasala presented his last work as a masterpiece. For that he meticulously selected 100 verses from the Bhagavad Gita. Ghantasala’s Bhagavad Gita musical composition has crossed 22 million views on YouTube. For the first time ever a tribute of a worldwide collaboration of 175 artists covering all Indian Classical dance forms from across 15 countries will be inaugurated. All the classical dances of India will be part of this tribute- from North to South. Forty national award-winning artistes and 60 state award-winning artistes will participate in the programme.
More than 100 children youth choir will perform. More than 200 children are being trained across various academic institutions and 100 are chosen for this unique display. For the first time ever an accapella for Ghantasala garu will be released. A live grand finale of Indian dances with more than 100 artistes (6+ years to 60+ years) will perform for a medley of Ghantasala lead by Kalaimamani Parvathi Ravi Ghantasala of Kala Pradarshini.
There will also be a Commemoration Book launch at the event. Also, the Ghantasala Kala Pradarshini Puraskars will be presented during the event, legendary personalities will be conferred with Puraskars. A playback music tribute by Mani and Band with leading next generation, movie fame super singers like Sai Vignesh, Samanvitha, Spoorthi Rao, Gowtham Bharadwaj and Sushmitha Narasimhan will do a tribute concert.
Kala Pradarshini, run by Parvathi Ravi Ghantasala has been working to promote and preserve India’s traditional art forms around the world since 1998 by organising various programmes around the globe. More than 10,000 artistes and countless supporting artistes, technicians and staff have benefited from these art programs. Parvathi Ravi is an award-winning mentor, choreographer and teacher of Bharatanatyam. She has won several titles including Kalaimamani (1999), the Special Kalaimamani (2020), Guinness book of world records for the largest Bharatanatyam class and recognitions internationally as well.
With a successful career in the world of art for over four decades, Parvathi Ravi has seen success in various initiatives to promote traditional art among the youth through her organisation, Kala Pradarshini. Parvathi says – a country needs engineers, doctors, lawyers and accountants, but a nation needs artistes to be a bridge to its culture and roots to their motherland.