’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் விமர்சனம்!

100

சென்னை:

வால்வாட்சர் பிலிம்ஸ் புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் தமிழில் வதந்தி தி ஃபேபிள் ஆஃப் வெலோனி என்ற பெயரில் எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். எட்டு எவிசோடுகளை கொண்ட இந்த வெப் தொடர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இப்போது அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
இதில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, நாசர், சஞ்சனா, விவேக் பிரசன்னா, வைபவ் முருகேசன், ஸ்ம்ருதி வெங்கட், அவினாஷ் ரகுதேவன், அஷ்வின் குமார், விக்கி ஆதித்யா, சி. சுஜாதா, ஹரீஷ் பெராடி, குமரன் தங்கராஜன், ஜி. ஜெய் பாபு, எம். மீரான் மிதீன், பிரதீப் குமார், திலீப் சுப்பராயன், அருவி பாலாஜி, மகேஸ்வரன், குலபுலி லீலா ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு : சரவணன் ராமசாமி, இசையமைப்பாளர் : சைமன்.கே.கிங்,  படத்தொகுப்பு-ரிச்சர்ட் கெவின், சண்டை-தினேஷ் சுப்பராயன் மற்றும் திலீப் சுப்பராயன், தயாரிப்பு வடிவமைப்பாளர்-அருண் வெஞ்சரமுடு, நிர்வாக தயாரிப்பாளர்-கவுதம் செல்வராஜ், இணை தயாரிப்பாளர்கள்-எஸ்.குஹப்பிரியா மற்றும் எஸ்.நந்தகுமார், ஆடை-சுபஸ்ரீ கார்த்திக் ஜெய், ஒளி வடிவமைப்பு-சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன், பிஆர்ஒ யுவராஜ்.

கன்னியாகுமரியில் காற்றாலைகள் நிறைந்த,  மலைப்பகுதியில் uLLa ஒரு காட்டில் படப்பிடிப்பு நடத்துவதற்காக சினிமா டெக்னீஷியன்கள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்க்கு சென்றபோது அங்கு ஓர் இளம்பெண் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்படுகிறார். உடனே அவர்கள் காவல்துறைக்கு தகவல் சொல்ல, அவர் எப்படி இறந்தார்? அந்த பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? யாரால் கொலை செய்யப்பட்டார்? என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிக்க முயலும்போது, அந்த கொலை கேஸ் சம்பந்தப்பட்ட மர்மங்களை கண்டுபிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.ஜே.சூர்யா தலைமையில் காவல்துறையினர் களத்தில் இறங்குகிறார்கள். ஆனால் விசாரணை நடத்தும்போது சரியான முறையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை. பல மர்மங்கள் நிறைந்த இந்த கொலையை யார் செய்தார்கள் என்பதை பல முயற்சிகள் செய்தும் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கும்போது,  ஒரு கட்டத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் இந்த விசாரணையை முடித்துவிடுகிறார்கள். ஆனால், அந்த முடிவை ஏற்க மறுக்கும் எஸ்.ஜே.சூர்யா, உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த இளம் பெண்ணை கொலை செய்தவர்களை  எஸ்.ஜே.சூர்யா கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதை விறுவிறுப்புடன் படமாக்கி இருக்கும் இணய தொடர்தான்  ’வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’.

எட்டு பாகங்கள் கொண்ட ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத் தொடர் என்று எளிதாகச் சொல்லிவிட முடியாதபடி பல மர்மங்கள் கொண்ட திரைக்கதை மூலம் மக்களது கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள்.

மர்மமான முறையில் இறந்த நாயகி வெலோனி எனும் பெயர் கொண்ட சஞ்சனாவின் வழக்கை விசாரிக்க வரும் உதவி ஆய்வாளர் வேடத்தில் நாயகன் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார்.  தான் எடுத்துக்கொண்ட கொலை வழக்கை முடிக்க முடியாமல் தவிக்கும்போதும், உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க, அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகளில் சரியான துப்பு கிடைக்காமல் போராடும்போதும், அதனால் தன் மனைவியிடம் அன்பாக பேச முடியாமல், மன உளைச்சலால்  அந்த பெண்ணைப்பற்றி, மனைவியிடம் புலம்பும்போதும் தனது  நடிப்பில் சிறப்பு செய்தியிருக்கிறார். எப்போதுமே சுறுசுறுப்பாக வலம் வரும் எஸ்.ஜே.சூர்யா  இதில் வழக்கத்திற்கு மாறாக அமைதியாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து வரவேற்புப் பெறுகிறார். விசாரணைக்காட்சிகள், துப்பறியும் காட்சிகள் ஆகியனவற்றை விட மனைவியுடனான ஊடல் கூடல் காட்சிகளில் அவர் நடிப்பு சிறப்பு. சில இடங்களில் எஸ்.ஜே.சூர்யா பேசும் வசனங்கள் கைத்தட்டல் பெறுகிறது.

கதையின் நாயகியான சஞ்சனா வெலோனியாக அழகு தேவதையாக துள்ளிக் குதிக்கும் இளமை, குழந்தைதனமான பேச்சு, சிரிப்பு, அனைவரையம் கவரும் தன் வசீகரமான அழகால் அன்புக்கு ஏங்கும் ஏக்கம் ஆகியனவற்றைக் கண்களிலேயே காட்டி நடித்திருக்கிறார். வெலோனியின் நிறைவேறாத ஆசைகள், லட்சியங்கள் எல்லாம் காணாமல் போவதை சஞ்சனா இயல்பாக யதார்த்தமாக நடிப்பால் சிறப்பு செய்துள்ளார்.

தொடரில் வரும் எழுத்தாளர் கதாபாத்திரம் அழுத்தமானது. இதில் நடித்திருக்கும் நாசர் கதையின் ஆரம்பம் முதல் அவரின் பார்வையில் தான் கதைக்களம் நகர்கிறது. இவரின் விவரிப்பு தொடரின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளது. வெலோனியிடம் பழகிய நாட்களில் அவளிடமிருந்து தெரிந்து கொண்ட விஷயங்களை புத்தகமாக எழுதி, அந்த புத்தகத்தில் வரும் வரிகள், அதை படிக்கும்  எஸ்.ஜே.சூர்யாவை அதிர்ச்சியடைய வைக்கும் காட்சிகள் சூப்பர்.

போலீஸ் எஸ்.ஐ வேடத்தில் நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, கன்னியாக்குமரி மாவட்ட தமிழை உச்சரிக்கும்போது தனது  இயல்பான நடிப்பின்  மூலம் அனைவரையும் கவர்கிறார். வெலோனியின் அம்மா வேடத்தில் நடித்திருக்கும் லைலா, ஆங்கிலோ இந்தியன் பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு மிக தத்ரூபமாகவும் நடித்திருக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்மிருதிவெங்கட் சிறப்பு. கணவரிடம் கோபித்துக் கொண்டு அப்பா வீட்டுக்குச் செல்லும் காட்சிகள் அருமை.

ஹரிஷ் பெராடி, அவினாஷ், அஸ்வின் குமார், குமரன் தங்கராஜ், விக்கி, ஆதித்யா, வைபவ் முருகேசன், மீரன் மீதின், அஸ்வின் ராம், பிரதிப் குமார், திலீப் சுப்பராயன், அருவி பாலாஜி, மகேஸ்வரன், குலபுலி லீலா ஆகியோர்  இத்தொடரில் நடித்திருந்தாலும் அனைவருமே இக்கதையோடு தங்களது  கதாபாத்திரத்தில் கச்சிதமாக மிக சிறப்பாக பயணித்து இருக்கிறார்கள்.

க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் என இத்தொடருக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் சரவணன் ராமசாமி, கதைக்கு ஏற்றவாறு காட்சிகளை  உள் வாங்கி கடுமையாக உழைத்திருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள்.

சைமன் கே கிங் இசையில் தரமான பின்னணி இசை மூலம் தொடருக்கு மிகப் பெரிய பலம் சேர்த்துள்ளார். தொடரின் தன்மையை உணர்ந்து,  நிறைய மெலொடி கலந்து இசையமைத்து இருப்பது பாராட்டத்தக்கது.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். தொடரின் துவக்கத்திலேயே வெலோனி கொலை செய்யப்பட்டதை காட்டி நம்மை அதிர்ச்சி அடைய வைத்து விடுகிறார். நாகர்கோயில் வட்டார வழக்கு தமிழ் மொழியை கதையில் கொண்டு வந்து, கிறித்துவர்களிலேயே பணக்காரர்களின் இறப்பு நடைமுறை, ஏழைகள் வீட்டில் இறப்பு நடைமுறைகளை யதார்த்தமாக காட்டி பாராட்டு பெறுகிறார். காவல்துறையில் இருக்கும் சில பலவீனங்களை சுட்டிக் காட்டி வசனங்கள் மூலம் தெளிவாக எடுத்து செல்லும் காட்சிகள் பிரமாதம். இன்றைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் ஏற்படும் சில நுட்பமான விசயங்களைத் திரைக்கதைக்குள் புகுத்தி இயக்கி இருப்பது பாராட்டதக்கது.

கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஆண்ட்ரூ லூயிஸ். தொடரின் துவக்கத்திலேயே வெலோனி கொலை செய்யப்பட்டதை காட்டி நம்மை அதிர்ச்சி அடைய வைத்து விடுகிறார். நாகர்கோயில் வட்டார வழக்கு தமிழ் மொழியை கதையில் கொண்டு வந்து, கிறித்துவர்களிலேயே பணக்காரர்களின் இறப்பு நடைமுறை, ஏழைகள் வீட்டில் இறப்பு நடைமுறைகளை யதார்த்தமாக காட்டி பாராட்டு பெறுகிறார். காவல்துறையில் இருக்கும் சில பலவீனங்களை சுட்டிக் காட்டி வசனங்கள் மூலம் தெளிவாக எடுத்து செல்லும் காட்சிகள் பிரமாதம். இன்றைய சூழ்நிலையில் மக்கள் மத்தியில் ஏற்படும் சில நுட்பமான விசயங்களைத் திரைக்கதைக்குள் புகுத்தி இயக்கி இருப்பது பாராட்டதக்கது.

மொத்தத்தில் ’வதந்தி -தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ இணையத்தொடர் ரசிகர்கள் ரசிக்கின்ற அளவிற்கு  வெற்றி பெறும் தொடர்தான்.

ரேட்டிங் 3/5.

RADHAPANDIAN.