இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘ஹனு-மேன்’.

88

சென்னை:

படைப்புத்திறன் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்திய திரைப்படமான ‘ ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியாகி பெரும் சாதனையை படைத்திருக்கிறது.

படைப்பாற்றல் மிகு இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட அசல் இந்திய சூப்பர் ஹீரோ திரைப்படம் ‘ஹனு-மேன்’. இளம் நட்சத்திரம் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம், பான் இந்திய திரைப்படமாக தயாராகி இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் தமிழ் உள்ளிட்ட ஏனைய இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டது.‌

படத்தின் டீசர் தேசம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. டீசரில் இடம்பெற்ற ஒவ்வொரு காட்சிகளும் வசீகரத்துடன் இருந்தது. டீசரில் ஹனு-மேனின் அறிமுகம் அனைவரையும் கவர்ந்தது. இதற்காக இயக்குநர் பிரசாத் வர்மாவிற்கு பிரத்யேகமான பாராட்டுகள் குவிந்து வருகிறது. இளம் நட்சத்திரமான தேஜா சஜ்ஜா சூப்பர் ஹீரோவாக அவருடைய தோற்றத்தை நேர்த்தியாக வெளிப்படுத்தி இருக்கிறார். இதனிடையே ‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியான குறுகிய காலக்கட்டத்தில் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. அதனுடன் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் ‘லைக்ஸு’ம் வழங்கப்பட்டிருக்கிறது. இது திரையுலகில் சாதனையாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இளம் நட்சத்திரம் தேஜா சஜ்ஜா ‘ஹனுமான் முன் கையில் சூலாயுதத்துடன் நிற்பது போன்ற போஸ்டர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

டீசரில் இடம் பெற்றிருக்கும் கிராபிக்ஸ் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது என்பதனை நிரூபித்திருக்கிறது. படக்குழுவினர் அண்மையில் அயோத்திக்குச் சென்று ஸ்ரீராமனின் ஆசிர்வாதத்தை பெற்று, அடுத்த கட்ட விளம்பரப் பணியில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார்கள். ‘ஹனு -மேன்’ திரைப்படத்தில் தேஜா சஜ்ஜாவுடன் வினய் ராய், ராஜ் தீபக் ஷெட்டி, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரவ் ஹரி -அனுதீப் தேவ்- கிருஷ்ணா சௌரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். கலை இயக்கத்தை ஸ்ரீ நாகேந்திர தாங்கலா வடிவமைத்திருக்கிறார். பிரைம் ஷோ எண்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்ரீமதி சைதன்யா வழங்குகிறார். குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும், அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். இந்தப் படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ‘ஹனு-மேன்’ படத்தின் வெளியிட்டு தேதியை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Prasanth Varma’s Pan India Movie HANU-MAN Teaser Clocks 50 M+ Views, 1M+ Likes

Prasanth Varma Cinematic Universe is a Pan-India shared universe of original Indian superhero movies created by creative director Prasanth Varma. The first feature of the universe titled HANU-MAN starring talented young hero Teja Sajja is gearing up to give an experience like never before for the audience across all languages.

The makers awestruck the entire nation with the teaser of the movie. Every frame was so captivating, and the presence of Lord HANUMAN gave goosebumps to one and all. Prasanth Varma is lauded for his vision and Teja Sajja made a good impression as the superhero. Meanwhile, the teaser crossed the 50 million views mark, and the likes count is 1M+, which is a big achievement for a film of its range. The poster where Teja Sajja is seen standing in front of Lord Hanuman with a mace in his hand is mighty impressive.

The VFX work or the technical standards didn’t give an impression that the movie was made on a decent budget. The team recently started the promotional journey from Ayodhya to seek the blessings of Lord Sriram. Amritha Aiyer is the leading lady opposite Teja Sajja in the movie, where Vinay Rai, Raj Deepak Shetty will be seen as antagonists and Varalaxmi Sarathkumar in a key role.

K Niranjan Reddy of PrimeShow Entertainment is producing the movie prestigiously, while Smt Chaitanya presents it. Asrin Reddy is the executive producer, Venkat Kumar Jetty is the Line Producer and Kushal Reddy is the associate producer. The cinematography for this magnum opus is by Shivendra, wherein the music is scored by the young and talented trio Gowrahari, Anudeep Dev and Krishna Saurabh. Srinagendhra Tangala is the production designer.

HANU-MAN is presently in the post-production stages and the makers will soon announce the release date.

Cast: Teja Sajja, Amritha Aiyer, Varalaxmi Sarathkumar, Vinay Rai, Getup Srinu, Satya, Raj Deepak Shetty and others

Technical Crew:
Writer & Director: Prashanth Varma
Producer: K Niranjan Reddy
Banner: Primeshow Entertainment
Presents: Smt Chaitanya
Screenplay: Scriptsville
DOP: Dasaradhi Shivendra
Music Directors: Gowrahari, Anudeep Dev and Krishna Saurabh
Editor: SB Raju Talari
Executive Producer: Asrin Reddy
Line Producer: Venkat Kumar Jetty
Associate Producer: Kushal Reddy
Production Designer: Srinagendhra Tangala
PRO: Yuvraaj
Costume Designer: Lanka Santhoshi