வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவு!

78

சென்னை:

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்டஎல்ரட் குமார் தயாரிப்பில் ‘விடுதலை’ பார்ட் 1 & 2 குறித்தான எதிர்பார்ப்பு பார்வையாளர்களிடையே அதிகம் இருக்கிறது. தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி மற்றும் பல திறமையான நடிகர்கள் நடித்துள்ளனர். ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே பார்வையாளர்களிடையே பேசு பொருளாக உள்ளது.

தற்போது ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களின் படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்தது என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது. ‘விடுதலை’ பார்ட் 1 படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வரும் நிலையில் படம் உலகம் முழுவதும்  வெளியாக இருக்கும் தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், எல்ரெட் குமார் ஏற்கனவே அறிவித்தபடி ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வழங்குகிறது. படத்தின் பாடல்கள், ட்ரைய்லர் மற்றும் படத்தின் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

‘விடுதலை’ திரைப்படம் அதன் பிரம்மாண்டத்திற்காகவும் ரசிகர்களிடையே பேசப்படுகிறது. கண்களைக் கவரும்படியான மிகப்பிரம்மாண்டமான மற்றும் உண்மையான படப்பிடிப்பு தளங்கள் ‘விடுதலை’ படக்குழுவின் உழைப்பைக் காட்டுகிறது. விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைப்பில் வேல்ராஜ் ஒளிப்பதிவில் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.