வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 1 & பார்ட் 2’ டப்பிங் பணிகள் எளிய பூஜையுடன் தொடங்கியது

91

சென்னை:

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி & சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 1 & பார்ட் 2’ டப்பிங் பணிகள் ஜனவரி 26 அன்று எளிய பூஜையுடன் தொடங்கியது. இதற்கான க்ளிம்ப்ஸை  படக்குழு நேற்று வெளியிட்டது

தயாரிப்பாளர் எல்ரெட் குமாரின் ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளது. அந்த வரிசையில் தற்போது பலராலும் எதிர்பார்க்கப்படும் படமான ‘விடுதலை பார்ட் 1 & விடுதலை பார்ட் 2’ தயாரித்து வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தை தேசிய விருது வென்ற இயக்குநரான வெற்றிமாறன் இயக்கி இருக்கிறார். சூரி மற்றும் விஜய்சேதுபதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் படக்குழு ஜனவரி 26, 2023-ல் டப்பிங் பணிகளை எளிய பூஜையுடன் தொடங்கியுள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தன் போர்ஷனுக்கான டப்பிங்கைத் தொடங்கியுள்ளார். போஸ்ட் புரொடக்சன் பணிகளும் விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் படத்தை வெளியிட, படத்தின் ஆடியோ, ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘விடுதலை பார்ட் 1 & விடுதலை பார்ட் 2’ வெளியாக இருக்கும் தேதி ஆகியவை குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் மிக அதிக பொருட்ச்செலவிலும் சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்திருக்க வேல்ராஜ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.