Tribal Horse Entertainment சார்பில் நடிகர் கிருஷ்ணா வழங்கும், இயக்குநர் திரு இயக்கத்தில், நடிகை அஞ்சலி நடித்திருந்த “ஜான்சி” இணைய தொடர்!
சென்னை:
Tribal Horse Entertainment சார்பில் நடிகர் கிருஷ்ணா வழங்கும், இயக்குநர் திரு இயக்கத்தில், நடிகை அஞ்சலி நடித்திருந்த “ஜான்சி” தொடர் முதல் சீசன் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது சீசன் வெளியாகியுள்ளது. முதல் சீசன் போலவே இரண்டாவது சீசனுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பைப் அளித்த நிலையில், படக்குழுவினர் இன்று பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்..நடிகர் தயாரிப்பாளர் கிருஷ்ணா பேசியதாவது
சீசன் 1 தமிழ், தெலுங்கு, இந்தியில் நல்ல ஹிட் இப்போது சீசன் 2 நன்றாக போகுமென்று நம்புகிறேன். சீசன் 1 விட 2 எனக்கு நிறைய பிடித்திருக்கிறது. திரு அசத்தியிருக்கிறார். சுரேஷ் சக்ரவர்த்தி முழு காய்ச்சலோட வந்து நடித்துக் கொடுத்திருக்கிறார். இத முதலில் 6 மாசத்தில் முடித்து விடலாமென்று தான் ஆரம்பித்தோம். ஆனால் 2 வருடம் ஆகிவிட்டது. ஆனால் உங்களுக்கு உறுதி சொல்கிறேன் சீசன் 3 யும் வரும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
இயக்குநர் திரு பேசியதாவது…
பொதுவா வெப் சீரிஸ் டிரமாவாக இருக்கும் ஆனால் இதில் நிறைய ஆக்சன் இருந்தது. அதைக் காட்சிப்படுத்துவது கஷ்டமாக இருந்தது. இதற்கு உறுதுணையாக இருந்த நடிகர்களுக்கும் படக்குழுவிற்கும் நன்றி.
நடிகர் சுரேஷ் சக்ரவர்த்தி பேசியதாவது…
கழுகு இயக்குநர் சத்ய சிவா பேசியதாவது..