பாடல் பாட வந்த அமெரிக்காவை சேர்ந்த சிந்தியா லௌர்டே கதையின் நாயகியாக நடிக்கும் “வர்ணாஸ்ரமம்”

91

சென்னை:

சமீபகாலமாக நடைபெற்று வரும் ஆணவக்கொலைகள் எதற்காக நடைபெறுகிறது.இதை தூண்டிவிடுபவர்கள் யார்? எப்படி எல்லாம் இதில் சம்பந்தப்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை கண்டறிய துப்பறியும் பத்திரிகையாளரான சிந்தியா லெளர் டே முற்படுகிறார். அதனால் அவருக்கு பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறுகிறது. அவைகளை கடந்து அவர் வெற்றிபெற்றாரா? இல்லையா? என்பதை கதைக்களமாக்கி உருவாக்கி இருக்கிறேன். இதை படமாக்க அமெரிக்காவை சேர்ந்த  சிந்தியா லௌர்டே யிடம் கதையை சொன்னேன்.அவருக்கு கதை பிடித்து இருந்ததால் நானே தயாரிக்கிறேன் என்றார். அப்படி என்றால் இந்த படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றேன்.அவரும் சரி என்று சொல்லி நடித்தார். இவர் நடித்தார் என்று சொல்வதைவிட இந்த கதையில் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்” என்று கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கும் சுகுமார் அழகர்சாமி கூறினார். படத்திற்கு ” வர்ணாஸ்ரமம்” என்று பெயர் சூட்டி தனது முதல் படமாக இயக்கி உள்ளார்.

சிந்தியா புரொடக்சன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் சிந்தியா லெளர்டே தயாரித்து கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இதில், ராமகிருஷ்ணன், “பிக்பாஸ் “அமீர், வைஷ்ணவி ராஜ், ஸ்ரீராம் கார்த்திக், விஷ்ணு பாலா, குகாசினி, நிமிமானுவேல், வாசுதேவன், வந்தனா, உமா மகேஷ்வரி, ஏ.பி.ரத்னவேல் என நிறையபேர் நடிக்கின்றனர்.

கூடுதல் திரைக்கதைக்கு டி.அருள்செழியன் உதவ, பாடல்களை உமாதேவி எழுத, தீபன் சக்கரவர்த்தி இசையமைக்க, பிரவீணா.S. ஒளிப்பதிவு செய்ய, ராஜேஷ்கண்ணா சண்டைப் பயிற்சி அளிக்க, நிர்வாக தயாரிப்பை ஏ.பி.ரத்னவேலுவும், தயாரிப்பு மேற்பார்வையை எம்.பாலமுருகனும் கவனிக்க, கா.சரத்குமார் படத்தொகுப்பையும், புத்தமித்திரன் கலையையும் கவனித்துள்ளனர்.

சிந்தியா புரொடக்சன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் சிந்தியா லௌர்டே ” வர்ணாஸ்ரமம்” படத்தை தயாரிக்க , சுகுமார் அழகர்சாமி எழுதி இயக்கி உள்ள இந்த படம் பிப்ரவரியில் திரைக்கு வர உள்ளது.