“தீர்க்கதரிசி” திரைப்பட இசை டிரெய்லர் வெளியீட்டு விழா!

78

சென்னை:

Sri Saravana Films சார்பில் B.சதீஷ் குமார் தயாரிப்பில், PG மோகன் – LR சுந்தரபாண்டி இயக்கத்தில், சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த், ஶ்ரீமன் நடிப்பில், உருவாகியுள்ள கமர்ஷியல் க்ரைம் திரில்லர் திரைப்படம் ‘தீர்க்கதரிசி’. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..,

இந்த படத்தின் இயக்குநர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்த வல்லுநர்கள். இந்த படத்தின் காட்சிகளைப் பார்க்கும் போது மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டது தெரிகிறது. சத்யராஜ் சாரின் அருமையான நடிப்பு இந்தப்படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. இந்தப்படம் பெரும் வெற்றியடைய அனைவருக்கும் வாழ்த்துகள்.

இயக்குநர் பேரரசு பேசியதாவது..

“இந்த படத்தின் இயக்குநர்கள் மிகச்சிறந்த இயக்குநர்களிடம் இருந்து வந்தவர்கள். அது இந்த படத்தில் நன்றாகத் தெரிகிறது. ஒரு நேர்த்தியான காவல்துறை படமாக இருக்குமென்பது பார்க்கும்போதே தெரிகிறது. அதோடு சத்யராஜ் சார் உடைய நடிப்பு, தீர்க்கதரிசி என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அற்புதமாக இருக்கிறது. அஞ்சாதே படத்தில் சிறப்பாக நடித்த அஜ்மல் இந்த படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். படம் வெற்றியடைய என்னுடைய வாழ்த்துகள்.“

இயக்குநர் ஹரி பேசியதாவது..,

“படத்தின் டிரெய்லர், பாடல் என அனைத்தும் சிறப்பாக இருக்கிறது. போலீஸ் திரைப்படம் பார்ப்பதே ஒரு கர்வம் தான். இந்தப் படத்தில் அஜ்மல் காவல்துறைக்கே உண்டான மிடுக்குடன் அழகாக இருக்கிறார். கதவுகள் மூடப்படாத ஒரே துறை காவல்துறை தான். அதைக் கருவாக வைத்து எடுத்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். “

நடிகர் ராம்குமார் சிவாஜி கணேசன் பேசியதாவது..

“இந்த படத்தின் ஒட்டுமொத்த குழுவிற்கும் எனது வாழ்த்துகள். இந்த படத்தின் காட்சிகள் மிகச்சிறப்பாக இருக்கிறது. படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள்.”

நடிகர் இயக்குநர் தம்பி ராமையா பேசியதாவது..,

“காவல்துறை கதாபாத்திரங்கள் தான் எனது வாழ்கையில் திருப்புமுனையாக இருந்தது. இந்த படமும் காவல்துறை பற்றிய கதையாக இருக்கிறது. இந்த படத்தின் இயக்குநர்கள் நிறைய அனுபவங்களுடன் களமிறங்கியிருக்கிறார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகள்.

நடிகர் ஶ்ரீமன் பேசியதாவது,

இந்த விழாவிற்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் ஒரு நாள் இரண்டு நாள் நடித்தவர்களும் இங்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இதை நான் ஏன் பதிவு செய்கிறேன் என்றால் ஒரு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் அனைவரும் கலந்து கொள்வது அவசியம். இரண்டு இயக்குநர்கள் என்பது பெயரில் மட்டும் தான், அவர்கள் மனதளவில் ஒருவர் தான், அதற்கு காரணம் அவர்கள் பயிற்சி பெற்ற இடம். இயக்குநர்கள் இந்த படத்தின் கதையை பவுண்ட் பண்ணி ரிவர்ஸ்ல இருந்து ஷூட் பண்ணிருகாங்க , ரொம்ப தைரியம் இருந்தால் தான் இத பண்ண முடியும். அவர்களின் இந்த  கான்ஃபிடென்ஸை நான் பாராட்டுகிறேன், எல்லாரும் சேர்ந்து ஒரு குழுவாக பணி புரிந்துள்ளனர் , இதற்கு உதவி கரமாக இருந்த காவல் துறைக்கு நன்றி கூறிக்கொள்கிறேன் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நடிகர் ஜெய்வந்த் பேசியதாவது..

இந்த விழாவிற்காக  பல ஊர்களில் இருந்து வந்த எனது அன்பான சகோதரர்களுக்கு நன்றி. தயாரிப்பாளர் சதீஷ்குமார் எனது கல்லூரி சீனியர். அவர் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார். இதற்கு முன் நான் நடித்த படத்தில் ஒரு சிக்கல் வந்த போது, அதற்கும் உதவ முன் வந்தவர் சதீஷ் சார் தான்.  அவர் தான் இந்தப்படத்தின் அற்புதமான இயக்குநர்களை எனக்கு அறிமுகப்படுத்தி வைத்து, ஒரு அற்புதமான கதையை எனக்கு கொடுத்து, அதில் நான் சரியாக பொருந்தி போவேன் என்றும் கூறினார்.  அவருக்கும், இயக்குநருக்கும் எனது நன்றிகள். இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி கூறி கொள்கிறேன். இந்த படம் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படமாக இருக்கும். இந்த படம் ஒரு மாஸ் எண்டர்டெயினராக  அனைவரையும் ரசிக்க வைக்கும்.

நடிகர் அஜ்மல் பேசியதாவது..,

“சத்யராஜ் சாருடன் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அது எனக்கு இந்த படம் மூலம் நிறைவேறி இருக்கிறது. ஜெய்வந்த், துஷ்வந்த் மற்றும் நான் இணைந்து ஒரு குழுவாக நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. இந்த படத்தின் இயக்குநர் கதை கூறும்போதே இப்படத்தில் நாம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்துவிட்டது. இந்த படத்தில் 15 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. அது உங்களைக் கண்டிப்பாக ஈர்க்கும். நீங்கள் இந்த படத்திற்கு பெரும் ஆதரவு தர வேண்டும். நன்றி“

இயக்குநர் PG மோகன் கூறியதாவது..,

“இது எனது முதல் படம், மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறோம். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் படமாக இருக்கும், இதற்கு உங்கள் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன். இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. “

இயக்குநர் LR சுந்தரபாண்டி பேசியதாவது..,

பல ஆண்டுகள் கழித்து இந்த படத்தில் மீண்டும் இயக்குநராக வந்து இருக்கிறேன். இந்த படத்தைக் குறைந்த நாட்களில் நாங்கள் முடிக்கக் காரணம், ஹரி சார் உடன் நாங்கள் பயணித்த போது கிடைத்த அனுபவம் தான். அவர் மிக வேகமாக வேலை பார்த்தாலும் சிறப்பாக வேலையை முடிப்பார். இந்த படம் பரபரப்பாகப் பல திருப்பங்களுடன் உங்களை மகிழ்விக்கும் படத்திற்கு  உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் சத்யராஜ் கூறியதாவது..,

“இது போன்ற சிறிய படங்கள் செய்யத் தயாரிப்பாளருக்கு நல்ல அனுபவம் தேவை. தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற இரட்டை இயக்குநர்கள் வரிசையில் இந்த இயக்குநர்களும் இணைய வேண்டும். ஒரு படத்தின் ஹீரோ ஸ்க்ரிப்ட் தான். இந்த படத்தின் கதையும் அந்த வகையில் சிறப்பாக இருக்கும். அஜ்மல் மிகச்சிறந்த நடிகர் என்பது இந்த படத்தின் மூலம் தெரிந்தது. கண்டெண்ட் சிறப்பாக இருந்தால், வெற்றி பெற்றுவிடலாம். இந்த படத்திலும் நல்ல கண்டெண்ட் இருக்கிறது. இந்த படம் வெற்றி பெற உங்களது ஆதரவைத் தாருங்கள் நன்றி.