உலக நாயகன் கமலஹாசன் வெளியிட்ட தங்கர் பச்சானின் “கருமேகங்கள் கலைகின்றன” திரைப்படத்தின் முதல் தோற்றம்!

69

சென்னை:

தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளால், மக்கள் மனங்களை வென்ற  இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில்,  நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமாக படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”. பாரதிராஜா, கௌதம் வாசுதேவ் மேனன்,  அதிதி பாலன், யோகிபாபு முதன்மை வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் முதல் தோற்றத்தை உலக நாயகன் கமலஹாசன் இன்று வெளியிட்டார்.

உலக நாயகன் கமலஹாசன் அவரது அலுவலகத்தில் இன்று இப்படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டார். அப்போது பாரதிராஜா, இயக்குநர் தங்கர்பச்சான் , தயாரிப்பாளர் டி. துரை வீரசக்தி ஆகியோர் உடனிருந்தனர். பாரதிராஜா இப்படம் தமிழ் திரை வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாக இருக்குமென்று கமல்ஹாசனிடம் கூறினார்.

படம் குறித்து நடிகர் கமலஹாசன் இயக்குநர் தங்கர் பச்சானிடம் கூறுகையில்…

தமிழ் சினிமாவின் பெருமை மிகு படைப்பாளி பாரதிராஜா ஒரு படைப்பை இந்த அளவு புகழ்ந்து பார்த்ததில்லை. இப்படத்தில் நடித்த பிறகு தான் ஓய்வுபெற்று விடலாம் என்று சொல்லும் அளவுக்கு அவர் கூறியது எனக்கு பேராச்சர்யம். இப்பொழுதே உடனடியாக படம் பார்க்கும் ஆவல் வந்துவிட்டது. விரைவில் படத்தை காட்டுங்கள் என்றார். மேலும் , இயக்குநர் தங்கர் பச்சானுக்கும், தயாரிப்பாளர் டி. துரை வீரசக்திகும் மற்றும் படக்குழுவினருக்கும் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மண்சார்ந்த மென்மையான படைப்பாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் தோற்றம் இணையம் முழுக்க பெரும் வரவேற்பை குவித்து வருகிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் படத்தின் பின்னணி இசை பணிகளை செய்கிறார் .  விரைவில் படத்தின் டீசர் வெளிவருமென தயாரிப்பு குழு அறிவித்துள்ளது.

நடிகர்கள் :-
பாரதிராஜா
அதிதி பாலன்
கௌதம் வாசுதேவ் மேனன்
யோகி பாபு
மஹானா
சஞ்சீவி
எஸ்.ஏ.சந்திர சேகர்
ஆர்.வி.உதயகுமார்
பிரமிட் நடராஜன்
டெல்லி கணேஷ்

தொழில்நுட்ப வல்லுநர்கள்:-
இயக்குநர்: தங்கர் பச்சான்
இசை: GV.பிரகாஷ்
பாடல் வரிகள்: வைரமுத்து
ஒளிப்பதிவாளர்: N.K.ஏகாம்பரம்
எடிட்டிங்: பி.லெனின்
கலை இயக்குனர்: மைக்கேல்
செட் டிசைன்: முத்துராஜ்
நிர்வாக தயாரிப்பாளர்: வராகன்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
தயாரிப்பு: VAU Media
தயாரிப்பாளர்: D.துரை வீரசக்தி

Actor Kamal Haasan unveils the First Look of Director Thankar Bachan’s Karumegangal Kalaiginrana’

Chennai: 06-03-2023: Ulaga Nayagan Dr. Kamal Haasan revealed the First Look Poster of Director Thankar Bachan’s upcoming film ‘Karumegangal Kalaiginrana’.

Filmmaker Thankar Bachan, one of the most critically-acclaimed moviemakers of the Tamil film industry has endowed remarkable films. And now, he is set to offer another beautiful experience for film buffs with his upcoming movie ‘Karumegangal Kalaiginrana’ featuring filmmaker Bharathiraja, Gautham Vasudev Menon, Yogi Babu, and Aditi Balan in the lead roles.

Ulaga Nayagan Dr. Kamal Haasan unveiled the film’s first look and wished the entire team, a grand success. Director-Actor Bharathiraja, Director Thankar Bachan, and producer Durai Veerasakthi were present for the occasion. The iconic actor also expressed his desire to watch the film as he was very impressed with the story’s premise. The shooting of Karumegangal Kalaiginrana is already completed, and currently, Music Director GV Prakash Kumar is working on the re-recording.

The film, which will be an amalgamation of emotions and nativity, has captured the attention of audiences with its first look, which is garnering a good response now.
The official announcement on the film’s audio, trailer, and worldwide theatrical release will be made soon. The film is produced by D Veera Sakthi of VAU Media Entertainment.

CAST

Bharathiraja
Aditi Balan
Gautham Vasudev Menon
Yogi Babu
Mahana
Sanjeevi
S.A. Chandrashekar
R.V. Udhayakumar
Pyramid Natarajan
Delhi Ganesh

TECHNICAL CREW

Direction: Thankar Bachan
Music: G.V. Prakash
Lyrics: Vairamuthu
Cinematography: N.K. Ekambaram
Editing: B Lenin
Art Director: Michael
Set Design: Muthuraj
Executive Producer: Varagan
PRO: Johnson
Banner: VAU Media
Production: Durai Veerasakthi