சென்னை:
வித்தியாசமான கதைகள் மற்றும் ஜானர்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருவதன் மூலம் நடிகர் கெளதம் கார்த்திக் தனது சினிமா பயணத்தை வெற்றிகரமாக அமைத்துள்ளார் . ஒரு படத்தில் இருந்து மற்றொன்றுக்கு வித்தியாசமான பாத்திரங்களை பரிசோதிக்கும் இவர் தற்போது, பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கக்கூடிய என்.எஸ்.பொன்குமார் எழுதி இயக்கிய அவரது “1947 ஆகஸ்ட் 16” படத்தில் நடித்துள்ளார்.
படத்தின் முதல் சிங்கிள் ட்ராக், ‘கோட்டிகார பயலே’ மற்றும் டீசர் இரண்டுமே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட முதல் சிங்கிள் ட்ராக் உடனடியாக பிரபலமடைந்தது. மேலும், சிறந்த காட்சியமைப்புகள், சிறந்த தயாரிப்பு மற்றும் கெளதம் கார்த்திக்கின் சிறப்பான நடிப்பு போன்றவற்றை உள்ளடக்கிய டீசர் படத்தின் எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரித்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, ரசிகர்கள் ஆர்வத்துடன் புதிய காதல் ஒன்றையும் இந்தப் படத்தில் பார்க்க காத்திருக்கிறார்கள். சீன் ரோல்டனின் இசை, இந்தப் படத்தின் மற்றொரு சுவாரஸ்யமான ஹைலைட்டாக இருக்கும்.
படத்தின் ட்ரெய்லர் மற்றும் உலகம் முழுவதும் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
என்.எஸ்.பொன்குமார் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சௌத்ரி ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும், ஆதித்யா ஜோஷி இணைந்து தயாரித்துள்ளார். செல்வகுமார் எஸ்கே ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.