இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’

69

சென்னை:

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணை நம்பாதே’. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார்.

மேலும் சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ‘ இப்படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலானது இதையடுத்து, இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘காத்திரு’ பாடல் இன்று வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது. அதன்படி, இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. புகழேந்தி வரிகளில் லக்ஷ்மிகாந்த் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.