சென்னை:
வட சென்னையில் காசிமேடு பகுதியில் வாழும் மீனவ குடும்ப மக்களின் கதையை மிக தத்ரூபமாக திரைக்கதை அமைத்து லோகேஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம்தான் ‘N4’.
காசிமேடு மீன் மார்க்கெட்டில் கடலுக்கு சென்று மீன்களை பிடித்து வரும் மீனவர்களிடம் மீன்களை வாங்கி சில்லறை விலையில் வியாபாரம் செய்து வருகிறார் வடிவுக்கரசி . பெற்றோர் இல்லாத அனாதைகளான மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா, வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகியோரை சிறு வயதில் இருந்து வடிவுக்கரசி வளர்த்து வருகிறார். இவர்கள் மீன் பிடித்து வரும் மீனவர்களிடம் படகிலிருந்து மீன்களை இறக்கி வைக்கும் கூலி தொழிலாளர்களாக வேலை செய்கிறனர். அந்த காசிமேடு பகுதியில் மகனுக்கு சிகிச்சை அளிக்க தனது வருமானத்தை மீறிய பணத்தேவை இருந்தும் நேர்மையான காவல்துறை பெண் அதிகாரியாக K4’ காவல் நிலையத்தின் அனுபமா குமார் பணியாற்றுகிறார்.
கல்லூரி மற்றும் காசிமேட்டு நண்பர்களுடன் அடிக்கடி வந்து மது குடிக்கும் பணக்கார . இளைஞனாக கல்லூரி மாணவரான அக்ஷய் கமல். அவனது காதலியுடன் அங்கு வந்து விட்டு போவது வழக்கம். இவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் இருந்தாலும் ஒரு முக்கிய சம்பவம் இந்த மூன்று குரூப்பையும் ஒன்று சேர்க்க வைக்கிறது. அதாவது அங்கு ஒரு துப்பாக்கி சூடு நடக்கிறது. துப்பாக்கி சூடு எதற்காக நடந்தது? யார் துப்பாக்கியால் சுட்டார்கள்? நேர்மையான காவல்துறை அதிகாரி நிலை என்னானது? என்பதுதான் ‘N4’.படத்தின் மீதிக் கதை!
காசிமேடு குப்பத்து காதலர்களாக சூர்யாவாக வரும் மைக்கேல் தங்கதுரையும்,, கார்த்தியாக வரும் அஃப்சல் ஹமீத்தும் இவர்கள் இருவரும் மிகவும் இயல்பாக காதல் காட்சிகளில் நடித்திருக்கிறார்கள். கேப்ரில்லா செலஸ் மற்றும் வினுஷா தேவி ஆகியோர் தொலைககட்சித்தொடர்களில் அறிமுகமாகி இருந்தாலும், இந்தப்படத்தில் அறிமுகமாகி சிறந்த முறையில் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பதை பாராட்டலாம். கதைக்கு பொருத்தமான கதாபாத்திரங்களாக அவர்களை தேர்வு செய்த இயக்குனர் லோகேஷ் குமாரையும் பாராட்டலாம். இந்த நான்கு பேரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மிக சிறப்பாக மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
நேர்மையான காவல்துறை பெண் அதிகாரி பாத்திமாவாக நடித்திருக்கும் அனுபமா குமார் அலட்டல் இல்லாமல் நடிப்பு அபாரம். சில்லறை விலையில் மீன்களை வாங்கி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தும் ஆயாவாக வடிவுக்கரசி, அந்த கதாபாத்திரத்திற்கு மிகப் பொருத்தமானவர் என்றே சொல்லலாம்.
சில உண்மையான சம்பவங்களை மையமாக வைத்து முழுக்க முழுக்க காசிமேடு குப்பம் மார்க்கெட் பகுதியிலும், மீனவர்கள் வாழும் வாழ்க்கையை மிக இயல்பாகவே இயக்கி இருக்கும் லோகேஷ் குமாரை பாராட்டினாலும் சில காட்சிகளில் தொய்வை ஏற்படுத்தி தடுமாறி இருப்பது ஏன் என்று தெரியவில்லை.
மீன்பிடி துறைமுகத்தில் நடைபெறும் கதையை மிக சிறப்பாக இயல்பாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் திவ்யன். ஒப்பனை இல்லாத நடிகர், நடிகைகளை ,தனது கேமராவுக்குள் புகுத்தி யதார்த்தமாக காட்டியிருப்பதை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்.
இசையமைப்பாளர் பாலசுப்பிரமணியம்.ஜி,இசையில் பாடல்கள் சுமார்ரகம்தான். ஆனால் பின்னணி இசை மூலம் கதையுடன் பயணித்திருக்கிறார்..
மொத்தத்தில் “N4” படத்தை அனைவரும் பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.