நடிகர் மணிகண்ட ராஜேஷ் நடிக்கும் ‘மை டியர் டயானா’ எனும் இணையத் தொடரின் படப்பிடிப்பு துவக்கம்!

59

சென்னை:

பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு ‘மை டியர் டயானா’ என பெயரிடப்பட்டு, அதன்  படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

அறிமுக இயக்குநர்கள் பி. கே. விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல்  இணையத் தொடர் ‘மை டியர் டயானா’. இதில்  நடிகர் மணிகண்ட ராஜேஷ், நடிகை மகாலட்சுமி,  ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இந்த இணையத் தொடருக்கு குஹா கணேஷ் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை இளங்கோவன் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த இணையத் தொடரை வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சசோகதரரும், பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் இணையத் தொடர் என்பதால் ‘மை டியர் டயானா’ விற்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.