சென்னை:
‘சொப்பன சுந்தரி’ என்ற பெயரை கேட்டவுடன் நம் நினைவுக்கு வருவது ‘கரகாட்டக்காரன்’ படத்தில் கவுண்டமணி, செந்தில் இருவரின் நகைச்சுவையில் வரும் இந்த காரை நாம் வைத்திருக்கிறோம்.. ஆனால் இந்த காரை வைத்திருந்த சொப்பன சுந்தரி யார் வைத்திருக்கிறார் என்று ஒரு வசனம் வரும் அந்த வசனத்தை தலைப்பாக வைத்து தான் ‘சொப்பன சுந்தரி’ படமே ஆரம்பமாகிறது. சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், தீபா, லட்சுமிபிரியா, கருணாகரன், மைம்கோபி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இபடத்தின் கதையைப் போறுத்தவரையில் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.
ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தனது நோயாளி தந்தையுடனும், வாய் பேச முடியாத சகோதரியுடனும், பேராசை பிடித்த தாயுடனும் வாழ்ந்து வருகிறார். தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு நகைக்கடையில் பணியாற்றுகிறார். இந்த நிலையில் நகை வாங்கியதற்காக ஐஸ்வர்யா ராஜேஷிற்கு ஒரு பரிசு கூப்பனில் முதல் பரிசாக கார் கிடைக்கிறது.. அந்த கார் கிடைத்ததும் மகிழ்ச்சியில் திளைத்த ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சகோதரியின் திருமணத்தை நடத்த முடிவு செய்கிறார். இந்த சமயத்தில் அவரது அண்ணன் கருணாகரன் அந்த நகையை நான் தான் வாங்கினேன். நகை வாங்கியதற்கான பரிசு எனக்கு தான் வர வேண்டும் என்று பிரச்சனை செய்கிறார். . இந்த விவகாரம் காவல் நிலையம் செல்கிறது. கடைசியில் உண்மையிலேயே கருணாகரன்தான் நகையை வாங்கினாரா? பரிசாக கிடைத்த கார் யாருக்கு போய் சேர்ந்தது? நகை வாங்கியது யார் என்பதுதான் ‘சொப்பன சுந்தரி’ படத்தின் மீதி கதை..
கலகலப்பான காமெடி கதாபாத்திரத்தில் மற்றும் குடும்பப் பொறுப்பு ஆகியனவற்றைச் சரியாக வெளிப்படுத்தி, முதல் முறையாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சண்டைக் காட்சிகளிலும் சிறப்பாக நடித்து. படத்திற்க்குப் பலம் சேர்க்கிறார். காமெடி செய்து சிரிக்க வைப்பது கஷ்டம் என்பார்கள். ஆனால் ஐஸ்வர்யாராஜேஷுக்கு அந்த காமெடி இயல்பாக வருவது பாராட்டுக்குரியது. கதையின் நாயகியாக படம் முழுவதும் நடிப்பில் அசத்தி இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ, இனி இது போல கதைகளில் தொடர்ந்து நடிக்கலாம்.
வாய் பேச முடியாத கதாபாத்திரத்தில் லக்ஷ்மி பிரியா நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தன் முக பாவங்கள் மூலமாகவே தன் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி தன் நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷின் அம்மாவாக நடித்திருக்கும் தீபா சங்கர், அப்பாவிதனமான கதாபாத்திரத்தில் நடித்தாலும், வசன உச்சரிப்பின் மூலம் அனைவரையும் சிரிக்க வைக்கிறார். தனது கணவரின் கிட்னியை விற்று விட்டு, இரண்டு மகள்களிடம் எப்படி சொல்வது என்று புரியாமல் முழிக்கும்போது, ,அதற்கு மகள்கள் கொடுக்கும் பதிலடிக்கு அவர் செய்த ரியாக்ஷன் காமெடி திரையரங்கையே கைத் தட்ட வைக்கிறது.
மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, சுனில் ரெட்டி, கருணாகரன்,ஷா ரா, சதீஷ் கிருஷ்ணன் ஆகியோரும் குறை வைக்காமல் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
அஜ்மல் தஷீனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம்தான். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கதைக்களத்துக்கு ஏற்ப மிக சிறப்பாக அமைந்திருப்பதை பாராட்டலாம்.
பாலமுருகன், விக்னேஷ் ராஜகோபாலன் ஆகிய இரண்டு பேர் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளனர். காமெடி படம் என்பதால், அதற்கு ஏற்ப வண்ணங்களை பயன்படுத்தி காட்சிகளை சிறப்பாக படமாக்கியிருக்கிறார்கள்.
ஒரு காரை மையமாக வைத்து அதற்கேற்றவாறு கதை எழுதி முழுமையான காமெடி படத்தை கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸின் திறமையை பாராட்டினாலும், அவருடைய எண்ணத்தை ஈடேற்ற பெரிய அளவில் உதவியிருக்கிறார் ஐஸ்வர்யாராஜேஷ்.
மொத்தத்தில், ‘சொப்பன சுந்தரி’ படத்தை ரசிக்கலாம்.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.