’ரிப்பப்பரி’ திரைப்பட விமர்சனம்!

55

சென்னை:

கோயம்புத்தூர் மாவட்டத்தின் அருகில் உள்ள தலைக்கரை என்ற கிராமத்தில் தன் ஜாதியில் உள்ள பெண்களை வேறு ஜாதி ஆண்கள் காதலிப்பதை எதிர்த்து ஜாதி வெறி பிடித்த பேய் ஒன்று அந்த காதல் செய்யும் ஆண்களை கொன்று விடுகிறது. இதனால் பல கொலைகள் நடக்கிறன. இந்த கொலைகளை கண்டுபிடிக்க காவல்துறை அதிகாரி மாஸ்டர் மகேந்திரனையும் அவரது இரு நண்பர்களையும் அழைத்து கொலையாளி பேய் யார் என்பதை கண்டுபிடிக்க உதவி செய்யுமாறு வேண்டுகிறார். அதற்காக மாஸ்டர் மகேந்திரனிடம் ஒரு பொம்மையை கொடுத்து அந்த பொம்மை பேய் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடும்.  ஆகவே நீங்கள் அந்த கிராமத்திற்கு சென்று யார் அந்த பேய் என்பதை கண்டுபிடித்து கொடுங்கள் என்கிறார் காவல்துறை அதிகாரி.

தனது நண்பர்களுடன் youtube சேனலை நடத்தி வரும் அவர். இந்த சூழ்நிலையில் தனது இரு நண்பர்களை  அழைத்துக் கொண்டு தலைக்கரை கிராமத்திற்கு அந்த பேயை கண்டுபிடிப்பதற்காக செல்கிறார்கள். இந்நிலையில்  தலைக்கரை கிராமத்தில் உள்ள ஒரு பெண்ணை தொலைபேசி மூலமாக காதலிக்கிறார் மாஸ்டர் மகேந்திரன்.  முகம் தெரியாத ஒரு பெண்ணை காதலிக்கும் மாஸ்டர் மகேந்திரன் அந்த காதலியை தேடி அதே தலைக்கரை  கிராமத்திற்கு செல்கிறார். அந்த கிராமத்திற்குச் சென்ற மாஸ்டர் மகேந்திரன் தனது நண்பர்களுடன் இணைந்து அந்த பேயை கண்டுபிடித்தாரா?  தொலைபேசி மூலமாக காதலித்த காதலியை கைப் பிடித்தாரா?என்பது தான் ‘ரீப்பப்பரி’ படத்தின் மீதி கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன் கதாபாத்திரத்திற்கு ஏற்ற இளமையோடும், துடிப்பான இளைஞனாக படம் முழுவதும் காமெடி கலந்த நடிப்பில் அசத்தி . அனைவரையும் கவர்கிறார். நண்பர்களுடன் சேர்ந்து குறும்புகள் செய்வது, பேயின் பின்னணியில் நடக்கும் சம்பவங்களில் மாட்டிக் கொண்டு தவிப்பது,  என படம் முழுவதும் காமெடி கலந்த நடிப்பில் ஈர்த்திருக்கிறார்.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் ஆரத்தி பொடி மற்றும் காவ்யா அறிவுமணி இருவரும் கதையின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தங்களது பணியை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். படத்தில் அவர்களுக்கு அதிகமாக வெலை கொடுக்கவில்லை.

முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீனி, வித்தியாசமான நடிப்பில் அசத்தி இருக்கிகிறார். அவரது கதையை சொல்லும் காட்சியிலும், தன் காதலியை பற்றி விவரிக்கும்  காட்சிகளிலும் நம்மை உருக வைத்து விடுகிறார்.

கதாநாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் நோபல் ஜேம்ஸ் மற்றும் மாரி ஆகிய இருவரும்  காமெடி காட்சிகள் முலமாக சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள். ஆனால் சிரிப்புதான் வரவில்லை.

ஒளிப்பதிவாளர் தளபதி ரத்தினம், இயற்கை எழில் மிகுந்த இடங்களில் காட்சிகளை படமாக்கி நம் கண்களுக்கு குளிர்ச்சியை  கொடுத்து இருக்கிறார்..

இசையமைப்பாளர் திவாகரா தியாகராஜனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார்ரகம்தான் என்றாலும், பின்னணி இசையை  கதைக்கு ஏற்றவாறு சிறப்பாக அமைத்து  படத்திற்க்கு பலம் சேர்த்து இருக்கிறார்..

ஒரு ஜாதி வெறி பிடித்த பேயை மையமாக வைத்து, காமெடி கலந்த திகில் படத்திற்கு கதை எழுதி இயக்குநர் நா.அருண் கார்த்திக், இயக்கியிருந்தாலும்,  அதில் லாஜிக் இல்லாத சாதி பிரச்சனை என்ற கருவை கையில் எடுத்திருப்பது   நம்ப முடியவில்லை.

மொத்தத்தில், ‘ரிப்பப்பரி’ படத்தை ரசிக்கலாம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.