புதிய தயாரிப்பாக அறிவித்துள்ள பிரின்ஸ் பிக்சர்ஸ் ஆர்யா- கவுதம் கார்த்திக் நடிக்கும் “மிஸ்டர் எக்ஸ் (Mr.X)”

64

சென்னை:

பிரின்ஸ் பிக்சர்ஸ்,  ஆர்யா- கவுதம் கார்த்திக்  நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் (Mr.X) என்ற படத்தை தங்களின் புதிய  தயாரிப்பாக அறிவித்துள்ளது.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர்  வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் ஆர்யா கதாநாயகனாகவும், கவுதம் கார்த்திக் வில்லனாகவும் நடிக்கின்றனர்.

எஃப்ஐஆர் என்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கிய மனு ஆனந்த் இப்படத்தின் கதையை எழுதி இயக்குகிறார். மிகப்பிரம்மாண்ட ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இப்படத்தின் பல சண்டைக்காட்சிகளின்
படப்பிடிப்பு உகாண்டா மற்றும் செர்பியா போன்ற நாடுகளில் நடைபெற உள்ளது.

மரகத நாணயம், பேச்சிலர், கனா, நெஞ்சுக்கு நீதி போன்ற படங்களுக்கு இசையமைத்த  திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கிறார்.

தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு – பிரசன்னா GK.
தயாரிப்பு வடிவமைப்பு ராஜீவன். சண்டைப் பயிற்சி ஸ்டண்ட் சில்வா. கலை இந்துலால் கவீத், .தயாரிப்பு மேற்பார்வை, A. P பால்பாண்டி. ஆடை வடிவமைப்பு உத்ரா மேனன்

நிர்வாகத் தயாரிப்பு ஷ்ரவந்தி சாய்நாத். இணை தயாரிப்பு
A. வெங்கடேஷ்.  பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பாக S. லஷ்மன்குமார் தயாரிக்கிறார். படத்தில் பங்கேற்கும் மற்ற நடிகர் நடிகைகள் விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

Arya-Gautham Karthik starrer “Mr. X”

Prince Pictures has officially announced their new project titled Mr. X starring Arya and Gautham Karthik as the lead characters.The First Look Poster and Motion Poster unveiled with the announcement have garnered excellent responses.

Arya plays the protagonist and Gautham Karthik performs the antagonist’s character in this movie. The film is written and directed by Manu Anand of ‘FIR’ movie fame, which will be an action-packed entertainer. The film will have high-octane action sequences that will be filmed in Uganda and Serbia.

Dhibu Ninan Thomas (Maragadha Nanayam, Bachelor, Kanaa & Nenjukku Needhi fame) is composing music for this film.
Tanveer Mir is handling cinematography. Prasanna GK is the editor.

Rajeevan is the production designer. Stunt Silva is choreographing action sequences and Indulal Kaveed is overseeing art works. Costume Design by Uthara Menon. AP. Paal Pandi is the Production Executive. Shravanthi Sainath is the Executive Producer A. Venkatesh is the co-producer.

S. Lakshman Kumar of Prince Pictures is producing this film., Details of other cast and crew will be revealed soon. Releasing in Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi.