விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் ‘குஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் வெளியீடு!

60

சென்னை:

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ குஷி’  படத்தில் இடம்பெற்ற ‘என் ரோஜா நீயா..’ என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் ‘குஷி’ திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலுக்கு ‘என் ரோஜா நீயா..’ என பெயரிடப்பட்டிருக்கிறது.

‘என் ரோஜா நீயா ..’ எனும் பாடலின் மெட்டிற்கும், பாடல் வரிகளுக்கும் விஜய் மற்றும் சமந்தா திரையில் தோன்றி காதல் உணர்வை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளில் கதையின் நாயகனான விஜய், காதல் மீது கொண்ட பேரார்வத்தின் காரணமாக காதலை விவரிக்கிறார். காஷ்மீரின் பசுமையான நிலவியல் பின்னணியுடன் தொடங்கும் இந்த பாடலுக்கான காணொளியில் நடிகர் விஜய் பொருத்தமான காதலராகவும், சமந்தா அவருக்கு ஏற்ற அழகிய காதலியாகவும் தோன்றுகிறார்கள்.

ஹேஷாமின் இசையமைப்பும், அவரது சொந்தக் குரலும் பாடலின் ஜீவனுடன் ஒன்றிணைந்திருக்கின்றன. அவர் இனிமையான மற்றும் புதுமையான பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடல் தரமான இசையை கேட்பவருக்கு நிச்சயம் பிடிக்கும். இயக்குநர் சிவா நிர்வாணா மணிரத்னத்தின் ரசிகர் என்பதால், இந்த பாடலில் இடம்பெற்ற சில காட்சிகள், மணிரத்னம் படத்தின் அதிர்வை பிரதிபலிக்கின்றன. இந்தப் பாடலுக்கு சிவா நிர்வாணா நடனமும் அமைத்திருக்கிறார்.

‘குஷி’ திரைப்படம் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்திருக்கும் காதல் கதை. இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் பாடலை  முதல் பாடலாக வெளியிட்டு, ரசிகர்களிடத்தில் கவனத்தை கவர்ந்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிதி பங்களிப்புடன் சிவா நிர்வாணா இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘குஷி’ திரைப்படம் செப்டம்பர் 1ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, ரோகிணி, வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார்.

முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான இன்று அவரது நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாக இருக்கும் ‘குஷி’ படத்திலிருந்து முதல் பாடல் வெளியிடப்பட்டிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Kushi’s First Song En Roja Neeye Is a Beautiful Melody

Actor Vijay Devarakonda is celebrating his birthday today and marking the occasion, Mythri Movie Makers who are bankrolling his upcoming film, Kushi have dropped the first audio single from the album. The song is titled En Roja Neeye.

In tune with the theme of the title, the song is also a depiction of the love track between the lead pair, played by Vijay and Samantha. Vijay describes the love he has towards his love interest through the novel lyrics that are penned by Madhan Karky. The lyrical video opens with the plush green locales of Kashmir and we see Vijay in a proper lover boy look. He is paired with Samantha who looks gorgeous as well.

Hesham’s composition and his own vocals are in sync with the song. He has composed a soothing and fresh song. It will take time to grow on the listeners but will certainly strike a chord with those who love quality music.

A few frames replicate the vibe of a Maniratnam film, which is a given considering that Siva Nirvana is a huge admirer of the former. Kushi is a love drama featuring Vijay and Sam. The first song has started the promotions on a soothing note. The Siva Nirvana directorial is funded by Mythri Movie Makers and it is up for release on the 1st of September.

The lyrics for the song are penned by Madhan Karky. Siva Nirvana choreographed the song.

Cast: Vijay Deverakonda, Samantha, Jayaram, Sachin Khedekar, Murali Sharma, Lakshmi, Ali. Rohini, Vennela Kishore

Crew
Di & Sound Mix: Annapurna Studios
VFX: Matrix
Makeup: Basha
Costumes: Rajesh, Harman Kaur, Pallavi Singh
Art: Uttham Kumar, Chandrika
Fights: Peter Heins
Writing Assistance: Suresh Babu P
PRO: Yuvraaj
Marketing: First Show
Exec Producer: Dinesh Narasimhan
Editor: Pravin Pudi
Production Designer: Jayashri Lakshminarayan
Music: Hesham Waheb
CEO: Cherry
DOP: G Murali
Producers: Naveen Yerneni. Ravi Shankar Yelamanchili
Story, Screenplay, Dialogues, Direction: Siva Nirvana