புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’
சென்னை:
நடிகர்-நடன இயக்குநர்-இயக்குநர் என பன்முகத் திறமை கொண்ட பிரபுதேவா, பிரபல மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் ‘பேட்ட ராப்’ என்று பெயரிடப்பட்டுள்ள பரபரப்பான, கலகலப்பான, நகைச்சுவை நிரம்பிய, பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க திரைப்படத்திற்காக இணைந்துள்ளார். புளூ ஹில் பிலிம்ஸ் பேனரில் ஜோபி பி சாம் தயாரிக்கும் இப்படம் சென்னையில் பூஜையுடன் துவங்கியது. ஜூன் 15, 2023 அன்று புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது. இப்படத்தில் பிரபல நடிகை வேதிகா கதாநாயகியாக நடிக்கிறார். ‘தேரு’ (2023) மற்றும் ‘ஜிபூட்டி’ (2021) போன்ற மலையாளப் படங்களை எஸ் ஜே சினு இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
காதல், சண்டைக் காட்சிகள், இசை, நடனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘பேட்ட ராப்’ உருவாக உள்ளது. இதற்கேற்ற வகையில் “பாட்டு, அடி, ஆட்டம் – ரிபீட்” என்ற சுவாரசியமான டேக்லைன் இப்படத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. பிரபுதேவாவை அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிடித்த வகையில் இப்படம் காட்டும் என்று படக் குழுவினர் தெரிவிக்கிறார்கள். கதை மற்றும் திரைக்கதையை டினில் பிகே எழுதியுள்ளார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். இந்தியாவின் பல்வேறு இடங்களில் இத்திரைப்படம் படமாக்கப்படவுள்ளது. புதுச்சேரி மற்றும் சென்னையில் முக்கிய காட்சிகள் பதிவு செய்யப்பட உள்ளன.
டி இமான் இசையமைக்க, ஐந்துக்கும் அதிகமான பாடல்களோடு வண்ணமயமாக ‘பேட்ட ராப்’ உருவாகிறது. படத்தொகுப்பாளராக சான் லோகேஷ் மற்றும் கலை இயக்குநராக ஏ.ஆர்.மோகன் பணியாற்றுகின்றனர். விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஷாஜோன், மைம் கோபி மற்றும் ரியாஸ் கான் ஆகியோர் படத்தின் மற்ற நடிகர்கள் ஆவர்.
தொழில்நுட்ப குழுவினர்: தலைமை இணை இயக்குநர் – சோழன், தயாரிப்பு நிர்வாகி – எம்.எஸ்.ஆனந்த், சசிகுமார் என், பாடல்கள் – விவேகா, மதன் கார்க்கி, ப்ராஜெக்ட் டிசைனர் – துஷார் எஸ், கிரியேட்டிவ் பங்களிப்பு – சஞ்சய் கசல், ஆடை வடிவமைப்பு – அருண் மனோகர், ஒப்பனை – அமல் சந்திரன், ஸ்டில்ஸ் – சாய் சந்தோஷ், மக்கள் தொடர்பு – நிகில் முருகன், பிரதிஷ் சேகர், வி எஃப் எக்ஸ் – விபின் விஜயன், டிசைன்ஸ் – மனு டாவின்சி.
புளூ ஹில் ஃபிலிம்ஸின் ஜோபி பி சாம் தயாரிப்பில் மலையாள இயக்குநர் எஸ் ஜே சினுவுடன் பிரபுதேவா இணையும் ‘பேட்ட ராப்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 15 அன்று தொடங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.
*Prabhudeva joins forces with Malayalam director SJ Sinu for ‘Petta Rap’ produced by Joby P Sam of Blue Hill Films*
*Vedhika to be the heroine of this thrilling, fun-filled comedy entertainer with musical score by D Imman*
Actor-Choreographer-Director Prabhudeva has teamed up with popular Malayalam director SJ Sinu for a thrilling, fun-filled comedy entertainer titled ‘Petta Rap’. The movie produced by Joby P Sam under the banner of Blue Hill Films went on floors with pooja in Chennai. Popular actress Vedhika will play the female lead character in the film whose shooting will commence in Pondicherry on June 15, 2023. SJ Sinu is known for directing Malayalam films like ‘Theru’ (2023) and ‘Djibouti’ (2021).
‘Petta Rap’ will lay emphasis on romance, action, music and dance. The team has captioned the film with an exciting tagline “Paattu, Adi, Aattam – Repeat” which promises Prabhudeva to be seen in his favourite genre. Dinil PK has penned the story and the screenplay. Cinematography will be handled by Jithu Damodar. The movie will be shot across different locations in India, with major portions to be canned in Pondicherry and Chennai.
D Imman is to score the music of the film, making it musically colorful with more than five songs. San Lokesh is the editor and AR Mohan is the art director. Other members of the cast of the film include Vivek Prasanna, Bhagavathy Perumal, Ramesh Tilak, Rajeev Pillai, Kalabhavan Shajon, Mime Gopi and Riyaz Khan.
Technical Crew:
Chief Co-Director – Chozhan, Production Executive – MS Anand, Sasikumar N, Lyrics – Viveka, Madan Karki, Project Designer – Tushar S, Creative Contribution – Sanjay Ghazal, Costume Design – Arun Manohar, Makeup – Amal Chandran , Stills – Sai Santhosh, PRO – Nikhil Murugan, Pratish Shekhar, VFX – Vipin Vijayan, Designs – Manu DaVinci.
The shoot of ‘Petta Rap’ produced by Joby P Sam of Blue Hill Films and directed by SJ Sinu with Prabhudeva as protagonist will commence on June 15.
***