“அஸ்வின்ஸ்” – திரைப்பட விமர்சனம்!

42

சென்னை:

தற்போது பலர் யூடியூப் சேனல் நடத்தி வருகின்ற மாதிரி கதாநாயகன்வசந்த் ரவியும் சொந்தமாக ஒரு  யூட்யூப் சேனல் நடத்தி வருகிறார்.  லண்டனில் உள்ள தீவில் தனியாக அமைந்திருக்கும் ஒரு ஆடம்பரமான பங்களாவில் தங்களது யூடியூப்  சேனலுக்காக படப்பிடிப்பு நடத்த முடிவு செய்து,.  அமானுஷ்யம் நிறைந்த அந்த பங்களாவையும், அதன் முழு விபரத்தையும் ஒரு வீடியோ படமாக எடுத்துக் கொடுக்க கூடிய வேலைக்காக கதாநாயகன் வசந்த் ரவி, சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகிய ஐந்து பேரும் இந்தியாவில் இருந்து லண்டன் செல்கிறார்கள். அந்த ஆடம்பர பங்களாவின் பின்னால் 1500 ஆண்டு காலப் பழமையான ஒரு சிக்கல் இருப்பது தெரியாமல், அந்த பங்களாவிற்க்குள் செல்லும் அவர்கள், அங்கு இருக்கும் அமானுஷ்ய சக்திகளிடம் மாட்டிக்கொண்டு, வெளியில் செல்லமுடியாமல் அவதிப்படுகின்றனர்..  கடைசியில் அந்த அமானுஷ்ய சக்திகளிடமிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா? இல்லையா?என்பதை திகிலுடனும், திரில்லிங் கலந்த கலவையுடன் சொல்லி இருக்கும் படம்தான் ‘அஸ்வின்ஸ்’.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் வசந்த் ரவி இபடத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். லண்டனில் உள்ல அமானுஷ்ய பங்களாவில் நடக்கும் பயங்கரமான சம்பவங்களை தனது கதாபாத்திரத்திற்க்கு ஏற்றவாறு சிறந்த  நடிப்பு மூலம் அனைவரும் ரசிக்கும்படி மிரட்டி இருக்கிறார். அவருடைய ஒவ்வொரு அசைவும், பயம் கலந்த கண்களும் படம் பார்ப்பவர்களை பதற வைக்கிறது. வசனம் அதிகம் இல்லாமல் பயம், பதற்றம், கோபம்  நிறைந்த , நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் விமலா ராமன், தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். சரஸ்வதி மேனன், முரளிதரன், உதயதீப், சிம்ரன் பரீக் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை  மிக சிறப்பாக  செய்திருக்கிறார்கள். பங்களாவுக்குள் மாட்டிக்கொண்டு சிக்கி தவிக்கும் அவர்களது அலறல் சத்தம் அனைவரையும் பயமுறுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் ஏ.எம்.எட்வின் சகே, படம் முழுவதையும் இருட்டில் படமாக்கினாலும், மிக நேர்த்தியாக காட்சிகளை கையாண்டு சிறப்பு செய்து இருக்கிறார்..

விஜய்சித்தார்த்தின் பின்னணி இசையில் படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை இதயம் நடுங்குகிற மாதிரி, நம் உடலை  அதிர வைக்கிறார்.

அமானுஷ்ய விசயங்களை வைத்துக் கொண்டு ஆழமான உளவியல் சிக்கல்கள் பற்றியும்,
தற்கால நிகழ்வுகளைபற்றியும்,  பழங்காலத்தோடு தொடர்பு படுத்தி திரைக்கதை, எழுதி,  இயக்கியிருக்கும் தருண் தேஜாவை பாராட்டலாம், குறும்படமாக எடுத்த ஒரு கதையை முழு நீள திரைப்படமாக எடுத்து அசத்தியிருப்பதற்க்கு கைத்தட்டல் கொடுக்கலாம்.. திகில் படங்களுக்கு எடுத்துக்காட்டாக இயக்கி இருக்கும் தருண் தேஜா, தமிழில் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹாலிவுட் தரத்தில் வெளி வந்திருக்கும்  இந்தப்படத்தை புகழ்ந்துசொல்லலாம்.

மொத்தத்தில் அனைத்து ரசிகர்களும் இந்த ‘அஸ்வின்ஸ்’ திகில் படத்தைப் பார்க்கலாம்.

ரேட்டிங் 4/5.

RADHAPANDIAN.