‘ராயர் பரம்பரை’ திரைப்பட விமர்சனம்!

43

சென்னை:

சின்னசாமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் சின்னசாமி மௌனகுரு தயாரித்து ராம்நாத்.டி இயக்கி இருக்கும் படம் “ராயர் பரம்பரை”. இப்படத்தில்  கிருஷ்ணா, சரண்யா, ஆனந்தராஜ், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா, ஆர்.என்.ஆர் மனோகன், கிருத்திகா, அன்ஷுலா ஜிதேஷ் தவான், கே.ஆர்.விஜயா, கஸ்தூரி, ஷர்மிளா, பாவா லட்சுமணன், சேசு, மிப்பு, தங்கதுரை, கல்லூரி வினோத் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் கதையைப் பொறுஹ்த்வரையில்,

பொள்ளாச்சி அருகே ஒரு கிராமத்தில் ராயர் பரம்பரையைச் சேர்ந்த ஆனந்தராஜுக்கு காதல் என்றாலே பிடிக்காது. ஏனென்றால் இவரின் தங்கை கஸ்தூரி காதலித்து திருமணம் செய்து ஊரை விட்டு ஓடிபோயிருப்பார். அதனால் இவருக்கு காதல் மீதும், காதல் செய்பவர்கள் மீதும் பெரிய அளவில் வெறுப்பு எற்படுகிறது.  அந்த ஊரில் யாரும் காதலிக்கக் கூடாது. அப்படி யார் காதலித்தாலும், அவர்களை துன்புறுத்தி அந்த காதலர்களை பிரித்து விடுவார்.  அதே ஊரில் மொட்டை ராஜேந்திரன் காதலுக்கு எதிரான  ஒரு சிறிய அரசியல் கட்சியை நடத்துகிறார், இந்த கட்சிக்கு தலைவராக மொட்டை ராஜேந்திரன் இருக்கிறார். தனது ஊரில் யார் காதலித்தாலும் அவர்களை பிரிக்கும் வேலையை மறைமுகமாக மொட்டை ராஜேந்திரன் செய்து வருகிறார்.  இந்த சூழ்நிலையில் அந்த ஊருக்கு வரும் கதாநாயகன் கிருஷ்ணாவை கதாநாயகிகள் கிருத்திகா சிங் மற்றும் அனுஷா தவான் காதலிக்கிறார்கள். ஆனால், கிருஷ்ணா அவர்களை நண்பர்களாக பார்க்கிறார். அவர்கள் இருவரின் காதலை ஏற்க மறுக்கிறார்.

காதலை பிரித்து துன்புறுத்தும்  ஆனந்தராஜுக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையுடையவர். ஜோதிடர் மறைந்த மனோபாலா ராயர் பரம்பரை ஆனந்தராஜின் மகளின் ஜாதகப்படி பெற்றோரின் சம்மதத்துடன் காதலித்து, திருமணம் செய்து கொள்வார் என்று  சொல்கிறார். ஆனால் இசை கல்லூரியில் ஒன்றாக படிக்கும் கிருஷ்ணாவும் சரண்யாவும் அடிக்கடி சண்டை போட்டு வருகிறார்கள். அவர்களுக்குள் எப்படி காதல் வரும். இந்நிலையில் ஆனந்தராஜ் தனது மகள் சரண்யாவை கிருஷ்ணா காதலிப்பதாக நினைத்து அவரை கொலை செய்ய திட்டமிடுகிறார்.தன்னுடன் இருக்கும்  அடியாட்களை அழைத்து கிருஷ்ணாவை கொல்வதற்கு அனுப்புகிறார். கடைசியில்  ஆனந்தராஜ் அனுப்பிய கொலையாளிகளிடமிருந்து கிருஷ்ணா தப்பித்தாரா?  இல்லையா? என்பதுதான் “ராயர் பரம்பரை” படத்தின் மீதிக் கதை.

கதாநாயகனாக நடிக்கும் கிருஷ்ணா துறு துறு இளைஞனாக காதல் காட்சிகளிலும், நகைச்சுவை காட்சிகளிலும் ரசிக்கும் படியான நடிப்பில் அசத்துகிறார். நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு நல்ல பொழுது போக்கு கதைகளத்தில் பாடல், நடனம், காதல், சண்டை என சிறப்பான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சரண்யா, அழகாக வந்து தனக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து இருக்கிறார். ஆனந்தராஜ் ராயராக ஒரு வில்லத்தனமான தந்தையாக நகைச்சுவை கலந்த, தனது அனுபவ நடிப்பால் மிரட்டி இருக்கிறார். காமெடியில் மொட்டை ராஜேந்திரன் கலக்கி இருந்தாலும், பெரும்பாலான காட்சிகளில் நம்மை சிரிக்க வைப்பதற்கு பதிலாக எரிச்சலடைய வைக்கிறார்.

மனோபாலா, ஆர்.என்.ஆர் மனோகர், கிருத்திகா, அன்ஷுலா ஜிதேஷ் தவான், கே.ஆர்.விஜயா, கஸ்தூரி, ஷர்மிளா, பாவா லட்சுமணன், சேசு, மிப்பு, வீட்டு உரிமையாளராக நடித்திருக்கும் தயாரிப்பாளர் சின்னசாமி மௌனகுரு, கதாநாயகனின் நண்பர்களாக நடித்திருக்கும் ‘கல்லூரி’ வினோத் மற்றும் தங்கதுரை ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு தகுந்தவாறு  மிகச் சிறப்பாக நடித்து இருக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு  இயற்கை எழில் நிறைந்த பகுதிகளை தேர்வு செய்து படமாக்கியிருப்பதோடு,  அதனை காட்சிப்படுத்தியிருப்பது ரசிக்க வைக்கிறது.

கணேஷ் ராகவேந்திராவின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாகவும், கேட்கும்படியும் இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப சிறப்பாக பயணித்து இருப்பதை பாராட்டலாம்.

பல வெற்றிப் படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார் இயக்குநர் ராமநாத்.டி. தன் முதல் படத்தில் காதல் கதையை தேர்வு செய்து அதில், ஆக்‌ஷன் மற்றும் சென்டிமெண்ட் கலந்து நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார். சில இடங்களில் தடுமாறியிருந்தாலும் கதையில் தான் சொல்ல வந்ததை மிக நேர்த்தியாகவும், எந்தவித நெருடல் இல்லாமலும் அனைத்து ரசிகர்களும் ரசிக்கக் கூடிய விதத்தில் இப்படத்தைக் கொடுத்திருக்கிறார்.

மொத்தத்தில், ‘ராயர் பரம்பரை’  நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு  அம்சங்கள் நிறைந்த படம்.

ரேட்டிங் 2.5/5.

RADHAPANDIAN.