“ஸ்வீட் காரம் காபி” இணையத்தொடரின் முக்கியத்துவத்தைப் பற்றியும், மூன்று தலைமுறைக் கதையின் ஒரு பகுதியாக நடித்திருப்பதைப்பற்றியும் மனம் திறந்து பேசிய நடிகை மது!

49

சென்னை:

ப்ரைம் வீடியோவின் ‘ஸ்வீட் காரம் காபி’யின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒரிஜினல் தமிழ் இணையத்தொடரின் முன்னோட்டம் வெளியிடப்பட்ட தருணங்களிலிருந்து, பார்வையாளர்கள் மத்தியில் இந்த தொடரைக் காணவேண்டும் என்ற உற்சாகம் ஏற்பட்டது. பிரைம் வீடியோவில் தற்போது ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கும் இந்த இணையத் தொடருக்குப் பார்வையாளர்கள், விமர்சகர்கள் மற்றும் தொழில்துறையின் பிரபலங்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நம்பமுடியாத கதை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று குறிப்பிடத்தக்க பெண்களைப் பற்றியது, ஆனால் அவர்கள் ஒரு அசாதாரண மற்றும் மறக்க முடியாத சாகசத்தை மேற்கொள்ளும்போது வெவ்வேறு தலைமுறைகளைச் சார்ந்தவர்களும் ரசிக்கிறார்கள். ஒரு தன்னிச்சையான சாலைப் பயணமாகத் தொடங்குவது…, சலிப்பான நடைமுறைகளிலிருந்து தப்பிப்பது… அவர்களைப் பிணைக்கும் சமூக விதிமுறைகளிலிருந்து விடுபடுவதற்கான, அவர்களின் தேவையால் தூண்டப்பட்டு, மேற்கொள்ளும் அந்த பயணம்..விரைவில் சுய-கண்டுபிடிப்பின் அற்புத தருணங்களாக உருமாறும் பயணமாக மாறுகிறது.

இந்த இணையத் தொடர் குறித்தும், வரவிருக்கும் தொடர்கள் மற்றும் அதன் தருணங்களைப் பற்றி முன்னணி நடிகை மது  சமீபத்திய நேர்காணலில் பேசுகையில், “ இந்த இணையத் தொடரின் தலைப்பு “ஸ்வீட் காரம் காபி” . இதில் உள்ளதைப் போல் சில அதிசயமான இனிப்பான தருணங்கள் மற்றும் ஆச்சரியமிக்க காரமான தருணங்கள் உள்ளன. நீங்கள் காரத்தை ரசிப்பீர்கள், ஆனால் அது உங்களிடத்தில் வித்தியாசமாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது, பிறகு காஃபி அமைதியாக இருக்க வேண்டும். அதுதான் பார்வையாளர்களும் ரசிக்கும் மற்றும் தொடர்புபடுத்தக்கூடிய பயணமாக இருக்கும்.

இவரது கதாபாத்திரம் மற்றும் இவரது OTT அறிமுகம் குறித்தும்… மூன்று தலைமுறைகளுக்கு நடுவில் இருப்பதைப் பற்றியும் பேசுகையில்,“ நான் இந்த தொடரில் மூன்று தலைமுறை பெண்களில் நடுவில் இருப்பதாகத்தான் நான் என்னைக் கண்டேன். நான் நிஜ வாழ்க்கையிலும் அதே வயதுடைய இரண்டு மகள்களின் தாயாக இருக்கிறேன், அதனால் அவர்கள் என்னை மிகவும் இயல்பாக வைத்திருக்கிறார்கள், அவர்களிடமிருந்து நான் எவ்வளவு இடைவெளியுடன் இருக்கிறேன் என்பதை அவர்கள் எனக்குக் கற்பிக்கிறார்கள். இன்றைய இசை, இன்றைய மொழி மற்றும் இன்றைய பெற்றோருடன் என் மகள்கள் என்னை மிகவும் தொடர்பில் வைத்திருக்கிறார்கள். ஒரு நடிகராக என்னுடன் வயதில் மூத்த ஒருவருடன் தொடர்பில் இருப்பதும்.. கடந்த காலத்தில் எனக்கு மூத்தவரான அவருடன் தான் நான் நடுவில் இருக்கிறேன். மூத்த தலைமுறையினரிடம் கொடுக்கவும், வாங்கவும் நிறைய இருக்கிறது. அன்றைய காலத்தில், நான் பணிபுரிந்தபோது எல்லா இயக்குநர்களும் என்னை விட மூத்தவர்கள்.” என பகிர்ந்து கொண்டார். .

இந்த தொடரின் பின்னணியில் உள்ள படைப்பாளியான ரேஷ்மா கட்டாலாவின் லயன் டூத் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட்டுடன் இணைந்து நடிகை மது பணியாற்றியுள்ளார். பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகிய மூன்று திறமையான இயக்குநர்கள் இந்தத் தொடரை இயக்கியிருக்கிறார்கள். லக்ஷ்மி, மது மற்றும் சாந்தி ஆகியோர் நடித்திருக்கும் ‘ஸ்வீட் காரம் காபி’ அதன் கவர்ச்சிகரமான கதை மூலம் உலகம் முழுவதிலுமுள்ள பார்வையாளர்களை கவரும் என்று உறுதியளிக்கிறது. உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பிரைம் உறுப்பினர்கள் இப்போது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருக்கும் இந்த தொடரைப் பார்க்கலாம்.