சென்னை:
அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், அம்மு அபிராமி, சேட்டை ஷெரீஃப், வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘பாபா பிளாக் ஷிப்’
இப்படத்தின் கதையைப் பொறுத்த்வரையில்,
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊரில் சுரேஷ் சக்கரவர்த்தி ஆண்கள் பள்ளி தனியாகவும், இருபாலர் படிக்கும் பள்ளியை தனியாகவும் குறுக்கே சுவர் வைத்து பிரித்து நடத்தி வருகிறார். இந்த சூழலில் சுரேஷ் சக்கரவர்த்தி மரணத்திற்குப் பிறகு இரண்டு பள்ளிகளையும் ஒன்றாக இணைத்து விடுகின்றனர்.. ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த ஐந்து பேரும், இரு பாலர் பயிலும் பள்ளியை சேர்ந்த ஐந்து பேரும் இரு அணிகளாக வலம் வருகின்றனர். இதனால் இரு அணியினர்களுக்கும் அடிக்கடி சண்டை ஏற்படுகிறது. ஒரு அணிக்கு தலைவர் அயாஸ். மற்றொரு அணிக்கு தலைவர் நரேந்திர பிரசாத்தும் ஒரே வகுப்பறையில் படிப்பதால் கடைசி பெஞ்சில் உட்கார இரண்டு குழுவினருக்கு இடையே சண்டை ஏற்படுகிறது.
கடைசி பெஞ்ச் எங்களுக்குதான் என எந்நேரமும் மோதிக் கொள்ளும் இரண்டு குழுவினர் மத்தியில் சில அறிவியல் போட்டிகளை நடத்தி அதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்குதான் கடைசி பெஞ்ச் என்று பள்ளி நிர்வாகம் அறிவிக்கிறது. இந்த நிலையில் அம்மு அபிராமியிடம் ஒரு மாணவன் எழுதிய கடிதம் கிடைக்கிறது. அந்த கடிதத்தில் பெயர் குறிப்பிடாத மாணவன் ஒருவன் தன் பிறந்தநாள் அன்று தற்கொலை செய்துகொள்ளப் போவதாக எழுதியிருக்கிறான். அந்த கடிதத்தை எழுதியவன் யார் என்ற குழப்பத்தில் கையெழுத்தை வைத்து கண்டுபிடிக்க மாணவர்கள் முயற்சி செய்கின்றனர். அந்த கடிதத்தை எழுதிய மாணவர் யார்? மாணவர்களிடையே இருந்த பகை நீங்கியதா? என்பதுதான் ‘பாபா பிளாக் ஷிப்’ படத்தின் மீதி கதை.
இப்படத்தில் அயாஸ், நரேந்திர பிரசாத் இருவரும் கதாநாயகன் கதாபாத்திரத்திற்க்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார்கள். பள்ளி மாணவர்களிடையே இருக்கும் திமிர் பிடித்த நக்கலான பேச்சு, குறும்புகள், பகைமை, அளவாக கையாளப்பட்டுள்ள காதல் ஆகிய அத்தனை உணர்வுகளையும் அழகாக மிக சிறந்த முறையில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
பள்ளி மாணவியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், ஹர்ஷத் கான், அதிர்ச்சி அருண், சேட்டை ஷெரிப், ராம் நிஷாந்த், குட்டி வினோ என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, நடிப்பில் கலக்கி இருக்கிறார்கள். அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘விருமாண்டி’ அபிராமி தன் கண்களால் பேசியே, அந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பு செய்திருக்கிறார்.
பள்ளி நிர்வாகிகள் சுப்பு பஞ்சு, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பள்ளி ஆசிரியர்களாக நடித்திருக்கும் மதுரை முத்து, போஸ் வெங்கட், வினோதினி ஆகியோர் அனுபவ நடிப்பின் மூலம் சொல்லிக் கொடுத்ததை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.
பள்ளி மாணவர்களின் கதையை மையமாக வைத்து நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் கலந்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராஜ் மோகன். பெற்றோர்களின் பாசத்தை மாணவர்கள் உணராமல் இருப்பதையும், மாணவர்களுக்கு அளவாக அறிவுரை சொல்லியும், நகைச்சுவையாக திரைக்கதை அமைத்து, படத்தை நகர்த்தி செல்ல முயன்றிருப்பதை பாராட்டலாம். ஆனால் கதையை இன்னும் அழுத்தமாக சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
ஒளிப்பதிவாளர் சுதர்சன் ஸ்ரீனிவாசன், ஒலிப்பதிவு கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது. மாணவர்களின் ஆட்டத்திற்க்கு ஏற்ப பாடல் காட்சிகளை பிரம்மாண்டமாக படமாக்கியிருக்கிறார்.
சந்தோஷ் தயாநிதியின் இசையில் பாடல்கள் எல்லாமே சுமார்ரகம்தான். பின்னணி இசையில் அதிக கவனம் செய்து இசை அமைத்து இருக்கிறார்.
மொத்தத்தில் “பாபா பிளாக் ஷிப்” பள்ளி, கல்லூரி மாணவர்கள் பார்க்க வேண்டிய படம்.
ரேட்டிங் 3/5.
RADHAPANDIAN.