அங்கிதா புரொடக்ஷன்ஸ் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “லாக் டவுன் டைரி”.

41

சென்னை:

அங்கிதா புரடக்ஷன் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் படம் “லாக் டவுன் டைரி”.

900 படங்களுக்கு ஸ்டண்ட்  மாஸ்டராக  பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.கே.எச் தாஸ். இசை ஜாசி கிஃப்ட்

இதில் ஜாலி பாஸ்டியன் மகன் ஜாலி விஹான் (அமீத்)  கதாநாயகனாக அறிமுகமாகிறார். சஹானா கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர்,. மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிக்கையாளர்கள்  மீடியாவினர்  முன்னிலையில் நடந்தது.  நிகழ்ச்சியில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன்,  பெப்சி விஜயன், தவசி ராஜ், நடிகர்கள் முத்துக்களை,  எம்.எஸ்.பாஸ்கர், நடிகை பிரவீனா, லியாகத் அலிகான்,  வசனகர்த்தா பிரபாகரன்,  எஸ்.முரளி மற்றும் பட குழுவினர் கலந்துகொண்டனர்.

இயக்குனர் ஜாலி பாஸ்டியன் வரவேற்று பேசினார். அவர் கூறியது:

900 படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்து எல்லா ஹீரோக்களுடன்.பணியாற்றி இருக்கிறேன். கன்னடத்தில் ஒரு படம்.இயக்கி இருக்கிறேன். 2வது படமாக லாக் டவுன் டைரி என்ற படத்தை தமிழில் இயக்கி உள்ளேன்.  கொரோனா காலகட்ட லாக் டவுன் நேரத்தில்  மக்கள் எவ்வளவு  சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.  வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை, மருந்து வாங்க கடைக்கு சென்ற இளைஞர்கள் போலீசிடம் அடி வாங்கினார்கள். இப்படி பல்வேறு சம்பவங்கள் நடந்தன. அதையெல்லாம் ஆராய்ச்சி செய்துதொகுத்திருப் பதுடன் இளம் காதல்  ஜோடி ஒன்று இந்த இக்கட்டான நேரத்தில் சிக்கி எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை  மையமாக வைத்து லாக் டவுன் டைரி படம்.உருவாகியிருக்கி றது. இது லாக் டவுன் கால கதை மட்டுமல்ல குடும்பங்களின் கதையும் உள்ளடக்கியது. குடும்பத்துடன் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள். உங்கள் எல்லோருக்கும் இப்படம் நிச்சயம்.பிடிக்கும் .இப்படத்தில் இடம் பெறும் லாக் டவுன் பற்றிய பாடலை நான் எழுதி இருப்பதுடன் திரைக்கதை, ஸ்டண்ட் அமைத்து இயக்கி உள்ளேன். வசனத்தை பிரபாகர், எஸ்.பி.ராஜ்குமார் எழுதி உள்ளனர். டைமண்ட் பாபு  புரமோஷன் உள்ளிட்ட பணிகளுக்கு எங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்.  இவ்விழாவில் கலந்துகொண்டு வாழ்த்திய அனைவருக்கும் நன்றி.

வசனகர்த்தா பிரபாகரன் பேசியதாவது:

இந்த படத்தில் என்னுடைய பங்களிப்பு ஒரு பகுதிதான். என் நண்பர் எஸ்.பி.ராஜ்குமார் இந்த படத்தின் ஒருபகுதி வசனம் எழுதி உள்ளார். இந்த படம் லாக் டவுன் மையமாக வைத்த படம். ஒவ்வொரு காலகட்டத்தில் ஒரு காலகட்டம் பதிவு செய்யப்படும். இப்படம் லால் டவுன் கால கட்டத்தை பதிவு செய்யும் படமாக   இருக்கும். இப்படத்தை மாஸ்டர் ஜாலி பாஸ்டியன்.இயக்க அவரது மகன் விஹான் ஜாலி (அமீத்) நடித்துள்ளார். இவர் தென்னகத்தில் உள்ள எல்லா ஹீரோக்களுக்கும் நிழல் ஹீரோவாக அதாவது டூப் ஹீரோவாக இருந்தவர். அவரை. வைத்து ஜாக்கி ஜான் பணியில் ஒரு படத்தை ஜாலி மாஸ்டர் இயக்குவார் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஒரு அருமையான கதையை எழுதி இயக்குகிறார். டாக்சி டிரைவராக விஹான் ஜாலி (அமீத்) நடிக்கிறார். ஒரு அழகான காதல், கணவன் மனைவி குடும்ப சூழலில் நிறைவான ஒரு படமாக லாக் டவுன்.டைரி.உருவாகி இருக்கிறது. இப்படத்துக்கு உங்கள் ஆதரவு தேவை நன்றி.

நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது:

ஜாலி மாஸ்டர் என்னை அழைத்து நீங்க எப்படி  வேண்டு மென்றாலும்  பேசி நடிங்க என்று சுதந்திரம் தந்தார்.  ஹீரோவின் வளர்ப்பு தந்தையாக மெக்கானிக் ஷெட் ஓனராக  என்னை நடிக்க வைத்திருக்கிறார்.  நல்ல கதை அம்சம் கொண்ட படம். ஆக்ஷன் சென்டிமென்ட், காமெடி எல்லாம் இதில் உள்ளது. இப்படம் வெற்றி பெற வேண்டிக்கொள்கிறேன்.

நடிகை பிரவீனா பேசியதாவது:

நான் நிறைய தமிழ்,.மலையாள படங்களில் நடித்துதிருக்கிறேன் நல்ல பாத்திரங்கள் மட்டுமே ஏற்று நடிப்பேன். லாக் டவுன் டைரி படத்தில் சிறிய பாத்திரம்தான். 2 நாள் கால்ஷீட்தான் கேட்டார்கள்.  இவ்வளவு சிறிய பாத்திரத்தில் ஏன் நடிக்க வேண்டும் மறுத்துவிடலாம் என்று எண்ணியிருந்தேன் இயக்குனர் என்னிடம் படத்தின் கதையை சொன்னபோது எனக்கு மிகவும் பிடித்தது. சிறிய வேடமாக இருந்தாலும் பரவாயில்லை இதில் நடித்தே ஆக வேண்டும் என்று நடிக்க ஒப்புக்கொண்டேன். இது எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். ஹீரோ பிரமாதமாக நடித்திருக்கிறார். தியேட்டரில் சென்று படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்.