‘டபுள் ஐஸ்மார்ட்’டில் இருந்து ‘தி பிக் புல்’ சஞ்சத் தத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது!
CHENNAI:
உஸ்தாத் ராம் பொதினேனி, பூரி ஜெகன்னாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸின் பான் இந்தியப் படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’டில் இருந்து ‘தி பிக் புல்’ சஞ்சத் தத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது!
உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் இருவரும் தங்களது வெற்றிப் படமான ‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் சீக்வலான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளனர். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிரடி ஆக்ஷன் காட்சிகளோடு மும்பையில் தொடங்கியது. பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் தயாரிக்கும் இந்தப் படத்திற்காக ராம் ஸ்டைலான மேக் ஓவரில் மாறியுள்ளார். விசு ரெட்டி தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார்.
படத்தின் அடுத்த பெரிய அப்டேட்டாக சஞ்சய் தத் படத்தில் நடிக்க இருப்பதை படக்குழு அறிவித்துள்ளது. ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முதல் ஷெட்யூலிலேயே இணைந்துள்ள சஞ்சய் தத்தின் கதாபாத்திரத்தை ‘பிக் புல்’ என அறிமுகப்படுத்தி முதல் பார்வை போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர்.
ஃபங்கியான தலைமுடி மற்றும் தாடி, காதணிகள், மோதிரங்கள், விலையுயர்ந்த வாட்ச், முகம் மற்றும் விரல்களில் டாட்டூ என மிகவும் ஸ்டைலிஷாகவும் அதே நேரத்தில் கடுமையான தோற்றத்திலும் சஞ்சய் தத் சிகரெட் பிடித்துக் கொண்டு இந்த போஸ்டரில் உள்ளார். துப்பாக்கிகள் அனைத்தும் அவரை நோக்கிக் காட்டப்பட்டிருந்தாலும் சஞ்சய் தத்தின் பயமில்லாத இந்த தோற்றம் படத்தில் அவர் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பதைக் காட்டுகிறது.
தனது நடிகர்களை படத்தில் எப்படி மாஸாக காட்ட வேண்டும் என்பதை அறிந்த பூரி, இதுவரை பார்த்திராத ஒரு தோற்றத்தில் ‘டபுள் ஐஸ்மார்ட்’டில் சஞ்சய் தத்தை காட்ட இருக்கிறார். ராம் மற்றும் சஞ்சய் தத்தை ஒன்றாகப் பார்ப்பது ரசிகர்களுக்கும், சினிமா ஆர்வலர்களுக்கும் நிச்சயம் உற்சாகம் தரக்கூடிய ஒன்று. இந்த வைல்டு காம்பினேஷன் கண்டிப்பாக படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்தில் பணிபுரிவதற்கான தனது உற்சாகத்தை ட்வீட் மூலம் பகிர்ந்து கொண்ட சஞ்சய் தத், ‘மக்களின் மாஸ் இயக்குநர் பூரி ஜெகன்னாத் ஜி மற்றும் எனர்ஜிட்டிக்கான உஸ்தாத் ராமுடன் பணிபுரிவதில் எனக்கு மிகுந்த பெருமை. இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் மாஸ் எண்டர்டெய்னர் படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தில் பிக் புல்லாக இந்த சூப்பர் டேலண்ட் டீமுடன் இணைவது உற்சாகமாக இருக்கிறது. மேலும், படம் மார்ச் 8, 2024 அன்று திரைக்கு வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ எனக் கூறியுள்ளார்.
ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் கியானி கியானெல்லி இந்த ஹை-வோல்டேஜ் ஆக்ஷன் என்டர்டெய்னரில் பணியாற்றுகிறார். ‘டபுள் ஐஸ்மார்ட்’ அதிக பட்ஜெட்டில் தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த தரத்துடன் தயாரிக்கப்படுகிறது. படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் பிற விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் மகா சிவராத்திரியான மார்ச் 8, 2024 அன்று ’டபுள் ஐஸ்மார்ட்’ படம் வெளியிடப்படும்.
தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: பூரி ஜெகன்னாத்,
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகநாத், சார்மி கவுர்,
பேனர்: பூரி கனெக்ட்ஸ்,
CEO: விசு ரெட்டி,
ஒளிப்பதிவு: கியானி கியானெல்லி,
ஸ்டண்ட் இயக்குநர்: கெச்சா