செல்வராகவன், யோகி பாபு நடிக்கும் புதிய திரைப்படம், தென் தமிழக அரசியலை மையமாகக் கொண்ட படத்தை ஜி ஏ ஹரிகிருஷ்ணன் தயாரிக்க ரெங்கநாதன் இயக்குகிறார்!

47

CHENNAI:

சமீப காலமாக நடிப்பில் கவனம் செலுத்தி அதிலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இயக்குநர் செல்வராகவன், மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

யோகி பாபு, பிரபல தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ, ராதாரவி மற்றும் வினோதினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குநர் ராஜீவ் மேனனின் மகள் சரஸ்வதி மேனன் நாயகியாக அறிமுகம் ஆகிறார். இன்னொரு நாயகியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும்.

படத்தை பற்றி பேசிய இயக்குநர் ரெங்கநாதன், “தென் தமிழ்நாட்டின் அரசியலை பற்றி பேசும் கதை இது. பரபரப்பான களத்தில் ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்களை புகுத்தி உள்ளோம். கதையைக் கேட்ட செல்வராகவன் அவர்கள் அதை மிகவும் ரசித்ததோடு முதன்மை வேடத்தில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். அவருக்கும் இப்படத்தை தயாரிக்கும் ஹரிகிருஷ்ணன் அவர்களுக்கும் மிக்க நன்றி,” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “படப்பிடிப்பு தொடங்கி திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐம்பது நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்ய திட்டமிட்டு பணியாற்றி வருகிறோம். பிரபல இசையமைப்பாளர் இத்திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். அவரது பெயர் விரைவில் வெளியிடப்படும்,” என்றார்.

இத்திரைப்படத்திற்கு அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவை கவனிக்க, ராமபாண்டியன் படத்தொகுப்பை கையாள்கிறார். கலை இயக்கத்திற்கு டி பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார். நிர்வாக தயாரிப்பாளர்: சதீஷ் சுந்தர்ராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.

மொமென்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் பேனரில் ஜி ஏ ஹரிகிருஷ்ணன் மற்றும் துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்க புதுமுக இயக்குநர் ரெங்கநாதன் இயக்கும் படமொன்றில் செல்வராகவன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.

Selvaraghavan, Yogi Babu act in new film; Produced by GA Harikrishnan and directed by Ranganathan, the yet-untitled movie revolves around south Tamil Nadu politics

Director Selvaraghavan, who has been making his mark in acting of late, is playing the lead role in a film directed by debutant Ranganathan and produced by GA Harikrishnan and Durga Devi Harikrishnan under Moment Entertainments banner.

Yogi Babu, popular Telugu actor Sunil, Malayalam actor Shine Tom Chacko, Radharavi and Vinodhini will be seen in key roles in this yet-to-be-titled film that features director Rajiv Menon’s daughter Saraswati Menon as the leading lady. The name of another heroine will be announced later.

Speaking about the film, Director Ranganathan said, “This is a story about the politics of south Tamil Nadu. We have added many interesting elements to attract the audience. Selvaraghavan, who listened to the story, liked it very much and agreed to play the lead role. My thanks to him and producer Harikrishnan.”

Speaking further, he said, “The shooting has started and is going on in places like Dindigul, Ramanathapuram and Kodaikanal. We are planning to complete the shoot in fifty days. A famous music composer is scoring the music for the film. His name will be announced soon.”

Arvind Krishna handles the cinematography and Ramapandian takes care of the editing for the film. T Balasubramanian is handling the art direction. Executive Producer: Sathish Sundharrajan, Public Relations: Nikil Murukan.

Selvaraghavan is playing the lead role in this film directed by debutant Ranganathan and produced by G A Harikrishnan and Durga Devi Harikrishnan under Moment Entertainments banner.